அள்ளிக்கொஞ்சிய விஜய் – கன்னம் கிள்ளிய அழகி…!!

Read Time:10 Minute, 2 Second

vijay-kajal06இந்தியஅளவில் “ஸ்பீட் ஸ்கேட்டிங்” சர்வதேச போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் வென்ற சேலத்தைச் சேர்ந்த மூன்றரை வயது சுட்டிக்குழந்தை நேத்ரா, மே மாதம் தாய்லாந்தில் நடக்கவுள்ள “ஏசியன் ரோலர் ஸ்போர்ட்ஸ் சர்வதேச போட்டி 2017” க்கு இந்திய அளவில் தேர்வாகியுள்ள ஒரே வீராங்கனை.

கடல் கடந்துச் செல்ல இருக்கும் இந்த வி.ஐ.பி யைத் தான் நேரில் சந்தித்துப் பாராட்டி அசத்தியுள்ளார் தமிழ்த் திரையுலக வி.ஐ.பி, நம்ம இளையதளபதி விஜய். தொடக்கத்தில் பத்து நிமிட சந்திப்புக்கு மட்டுமே நேரம் ஒதுக்கிய விஜய், அதன்பின் சுமார் 45 நிமிடத்திற்கு மேலாக சந்திப்பை நீட்டித்துக்கொண்டார். அந்த அளவுக்கு சுவாரஸ்யமாயிருந்திருக்கிறது குறித்த சந்திப்பு.

நம்ம இளையதளபதிக்கு எப்பவுமே விளையாட்டு என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால், குட்டி வீராங்கனை நேத்ரா பற்றிக் கேள்விப்பட்ட அவர் ‘அட….! மூணரை வயதில் தங்கத் தமிழச்சியா ஜொலிக்குதே குழந்தை, அது யாருன்னு விசாரிச்சு சொல்லுங்க நான் மீட் பண்ணணும்’ என்றார். அதன்பிறகு தான் இந்த வாலு வி.ஐ.பியை சந்தித்து, சந்திப்பிற்கான நேரம் ஒதுக்குமாறு கேட்டு வாங்கி, இளையதளபதியுடனான சந்திப்பினை ஏற்பாடு செய்தோம். இது வாலு இல்லை… அறுந்த வாலு என்று கூறி, குழந்தையை விஜய் செல்லமாய் கொஞ்சினார் என்கிறார் விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் ஆனந்த்.

அத்துடன், இந்த இரண்டு வி.ஐ.பி கள் சந்தித்துக் கொண்ட அந்த சுவாரசிய காட்சியையும் வார்த்தையில் இவ்வாறு விபரித்தார், விஜய் மக்கள் இயக்க மாநிலத்து தலைவர் ஆனந்த்.

குட்டிப் பாவாடை அணிந்து அழகாய் அடையார் அலுவலகத்திற்குள் உள்ளே நுழைகின்ற சுட்டிக்குழந்தை நேத்ராவை ‘ஹாய் பேபி , யூ ஆர் லுக்கிங் லைக் அன் ஏஞ்சல்’ என விஜய் வரவேற்க ‘தேங்க்யூ ப்ரோ’ என்றார் நேத்ரா. ‘ச்சோ ச்வீட் ‘ என்று விஜய் நேத்ரா கன்னத்தை கிள்ள, அதேபோல ‘ச்சோ ச்வீட் ‘ என விஜயின் கன்னத்தை கிள்ளுகிறார் நேத்ரா.

ஹே வாலு’ என்று விஜய் நேத்ராவை தூக்கி கொஞ்சியவர், ‘இந்த அங்கிள் ஒரு மேஜிக் பண்றேன். கண்ண மூடுங்க’ என்றார். நேத்ராவும் கண்ணை கை வைத்து மூடியவர், விரல் இடுக்கு ஓட்டை வழியாக பார்க்க, ‘ஹே , ஹே ஹே ச்சீட் பண்றியே பேபி’ என்று சிரித்த விஜய், கையாய் அப்படி இப்படி ஆட்டி தனது பாக்கட்டிற்குள் இருந்து இரண்டு சாக்லெட்டை எடுத்து நேத்ரா முன் நீட்டுகிறார்

கண்ணை திறந்து பார்த்தவர் கையயை விரித்து ‘வாவ் எனக்கு பிடிச்ச கேட்பரி சாக்லேட்’ என ஆச்சர்யத்தில் புருவம் உயர்த்தி , ‘விஜய் அங்கிள்னா , விஜய் அங்கிள் தான் ‘ என்று கன்னத்தை பிடித்து முத்தமிடுகிறார்.

‘அட இந்த சுவீட் நல்லாருக்கே’ என விஜய் சிரிக்க, ‘போங்க பேபி’ என மழலை வெட்கத்தில் நேத்ரா சிரித்தார்.

‘நேத்ரா….!!! என்னுடைய படமெல்லாம் பார்ப்பியா?’ என விஜய் கேட்க ‘ஹ்ம்ம் ப்ரோ, உங்க ஜீத்து ஜில்லாடி, ஈனா மீனா டீக்கா’ பாட்டுக்கு செமயா ஆடுவேன்’ என்று ஆடிக்காட்ட , அங்கேயிருந்த நேத்ரா அப்பா, தன் செல்போனில் இருந்த வீடியோவை விஜயிடம் காட்டுகிறார். அதில், ‘நேத்ரா தூங்கியபடி இருக்க, ஜிங்கினிமனி ஜிங்கினிமனி ஜில்லா பாடல் ஒலிக்க ,உடனே நேத்ரா எழுந்து ஆடுகிறார். ‘இதைப் போட்டுத்தான் நேத்ராவை எப்போதும் எழுப்புவோம்’ என்றார் அவரின் அப்பா. இதைப் பார்த்த விஜய் சிரித்தபடியே ‘பேபி நாம ரெண்டு ஸ்டெப் போடுவோம்’ என விஜயும்நே
த்ராவும் இடுப்பை ஆட்டி குட்டி ஆட்டம் போட அந்த இடமே குறும்பு கவிதையாக காட்சி தந்தது.

அதன்பின் தங்கப்பதக்கம் வாங்கிய அனுபவத்தை விஜய் கேட்க, அதை விஜய் பட க்ளைமாக்ஸ் காட்சி போலவே விவரிக்கிறார் நேத்ரா.

பேபி, கோவால பைனல் நடந்தபோது மத்தவங்களுக்கு எல்லாம் நிறைய பேர் கைதட்டினாங்க. எனக்கு அதிகமா தட்டவே இல்லை. ஆனாலும் பொசிஷசன், ஸ்டார்ட் ன்னு சொன்னாங்க ஸ்பீடா போனேன். ஜெயிச்சுட்டேன்’ என இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி கொண்டாட, ‘இந்த எலும்பு, தோலுக்குள்ள தான் இவ்ளோ ஸ்பீடு இருந்துச்சோ’ என்று செல்லம் கொஞ்சிய விஜய், ‘சரி அங்கிள்க்கு ஸ்கேட்டிங் பண்ணி காட்டமாட்டிங்களோ’ என கேட்க, கொண்டுவந்த ஸ்கேட்டிங் ட்ரெஸ் போட்டபடியே…

‘பேபி, இதுதான் ஹெல்மெட் இதை போட்டுக்கிட்டா தலையில் அடிபடாது, இதுதான் ‘நீ கேப்’ இதைபோட்டுக்கிட்டா முட்டில அடிபடாது’ என நேத்ரா எடுத்து சொல்ல,’ஓ’! என்று தெரியாதது போல புருவம் உயர்த்தினார் இளைய தளபதி. பின் அந்த அலுவலகத்திலேயே பம்பரம் போல சுற்றி சுற்றி ஸ்கேட்டிங் ஆடி அசத்தினார் நேத்ரா.

உண்மையிலேயே இது ஸ்பீடு ஸ்கேட்டிங் தான் பேபி’ என்றார் விஜய். ‘ஆனா இவ்ளோ சேஃப்ட்டி கிட்ஸ் போட்டும் ஸ்பீடா போனேனா! கால் முட்டியில் அடிபட்டுடுச்சு’ என்று சோகமாக நேத்ரா சிணுங்க ‘அச்சச்சோ ‘ என்று நேத்ராவை தூக்கி மடியில் வைத்து கால்களை நீவியபடியே, ‘பேபி எனக்கும் டான்ஸ் ஆடும்போது கால்ல அடிபட்டிருக்கு.’ என விஜய் கூற, அவர் காலை நீவிவிடுகிறார் நேத்ரா

‘நீ வாலு இல்லை அறுந்தவாலு ஆனாலும் கியூட் வாலு’ என்ற விஜய். பின் கோச்சுகள் கே.ராஜேஷ்குமார், மேகலாவை அழைத்தார். ‘உங்களைப்போன்றவர்களால் தான் ஆரோக்கியமான இளம் தலைமுறை உருவாகிறது. இப்படி நிறைய சாதனையாளர்களை உருவாக்குங்கள். விளையாட்டில் நம் நாடு நிறைய சாதிக்கணும். என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்’ என்றார். நன்றி கூறினார்கள் இருவரும்.

நேத்ராவின் அப்பா தமிழன் பார்த்திபன், ‘என் மகள் தனது திறமையால் இந்தியாவில் ஒரே வீராங்கனையாக தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அந்த அடையாளத்தை நான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை’ என பொதுவெளியில் தன்னை காட்சிப்படுத்திக்கொள்ளவில்லை. இதையறிந்த விஜய், ‘என்ன ப்ரோ! இதை வெளில சொன்னாதான் எல்லா பெற்றோருக்குமே சாதனையாளர்களை உருவாக்கணும்ன்னு ஒரு உத்வேகம் வரும்’ என்று செல்லமாக கோபித்துக்கொண்டார்.

இறுதியாக மீண்டும் நேத்ராவிடம் திரும்பியவர், ‘எப்பவும் ஜெயிக்கிறதுதான் முக்கியம். வலிய பாக்காம ஜெயிச்ச நீ கியூட் பேபி. இதேபோல போராடி தாய்லாந்துல நடக்குற போட்டியில உலகளவில் தங்கப்பதக்கம் வாங்கி நம்ம நாட்டுக்கு பெருமை சேர்க்கணும். அப்போ இந்த அங்கிள் உன்னை சந்திக்கும்போது இன்னும் இன்னும் மேஜிக் செஞ்சு சர்ப்ரைஸ் செய்வேன். சரியா?’ என விஜய் சொல்ல, ‘ஓகே பேபி’ என்றார் விஜயின் இரண்டு கன்னத்தையும் பிடித்து கிள்ளினார் குட்டிப்பாப்பா. தெறி பார்ட் டூ பார்த்த பீலிங் நமக்கு……

இவ்வாறு அந்த இனிய சந்திப்பை எம்மோடு பகிர்ந்து கொண்டார் ஆனந்த்.

6979-cinema152587799

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெரு நாட்டில் விமானவிபத்து 141 பயணிகளின் நிலை என்ன? (வீடியோ)
Next post காணாமல் போன இளைஞன் இராட்சத மலைப்பாம்பின் வயிற்றுக்குள்..!! (பதறவைக்கும் காணொளி)