நகங்களை அற்புதமாக வெளிப்படுத்தும் நெயில்பாலிஷ் கலவைகள்..!!

Read Time:6 Minute, 59 Second

24-nail-artநீங்கள் ஸ்டைலாகவும் மற்றும் அழகாகவும் தோற்றமளிக்க வேண்டும் என்று விரும்பினால், உடைகள், மேக்கப், முடியின் ஸ்டைல் மற்றும் நகம் என பல விஷயங்களை கவனித்திட வேண்டும். ஒழுங்காக வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட நகங்களை கொண்டிருக்கும் பெண்கள் அழகாகக் காட்சியளிப்பார்கள். எனவே, இன்றைய நாகரீகத்திற்கு ஏற்றவாறு நகங்களை அழகுபடுத்தக் கூடிய சில காம்பினேஷன்களை நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன். இந்த வண்ணக் கலவைகள் நகங்களையும், உங்களையும் அழகுற தோற்றமளிக்கச் செய்யும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

பெரும்பாலான பெண்கள் தங்களுடைய நகங்களுக்கு பல்வேறு விதமான வர்ணங்களைத் தீட்டிக் கொள்வதை நீங்கள் கண்டிருப்பீர்கள். எடுத்துக்காட்டாக, உங்களுடைய நகங்களில் ஒரு நகத்தை கருப்பு நிறத்திலும் மற்றும் பிற நகங்களை வெள்ளை நிறத்திலும் வர்ணம் அடித்திருப்பதைச் சொல்லலாம். இன்றைய நாட்களில் பெரிதும் விரும்பப்படும் வண்ணக் கலவையாக இது உள்ளது. போல்கா டாட்ஸ் மற்றும் ஸ்ட்ரைப்ஸ் (கோடுகள்) போன்ற வடிவமைப்புகளிலும் உங்களுடைய நகங்களுக்கு வண்ணங்களை தீட்ட முடியும். இந்த புதிய முயற்சிகளை ஒரு முறை பரீட்சித்துப் பார்க்க நினைத்தால், இங்கே தரப்பட்டுள்ளவற்றைப் பயன்படுத்தி அழகு பெறுங்கள்.

கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு பெண்மைக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் இந்த வண்ணங்கள் இரண்டும் ஒன்றாகக் காண்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஒரு நகத்தை கருப்பு நிறத்தில் விட்டு விட்டு, பிற நகங்களை இளஞ்சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டினால் அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இந்த வண்ணக்கலவை பல்வேறு உடைகளுக்கும் ஏற்றதாகவும், பளிச்சிடும் நிறம் கொண்டதாகவும் இருக்கும்.

ஒவ்வொரு நாளும் உங்களுடைய ஸ்டைலை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் மற்றும் மிடுக்காகவும் தோற்றமளிக்கவும் செய்யும்.

கருப்பு மற்றும் வெள்ளை இந்த வண்ணக் கலவையை பயன்படுத்தும் போது, 8 வெள்ளை நிற நகங்கள் மற்றும் 2 கருப்பு நிற நகங்களைக் கொண்டிருப்பீர்கள். கருப்பும், வெள்ளையும் உன்னதமான வண்ணங்களாக கருதப்படுவதால், இந்த வண்ணக்கலவைகள் தீட்டப்பட்ட நகங்களுடன் நீங்கள் அலுவலகத்திற்கும் சென்று வரலாம்.

கடல் நீலம் மற்றும் சில்வர் உங்களுடைய நகங்களின் பளபளப்பில் சற்றே மாற்றத்தைக் காட்ட விரும்பினால், நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய வண்ணம் சில்வர் ஆகும். எனினும், இந்த வண்ணத்தை தேவைக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். நல்லதொரு விளைவை ஏற்படுத்த விரும்பினால், இரண்டு சில்வர் நகங்களைக் கொண்டிருந்தால் கூட போதுமானது.

ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நம்மில் பலருக்கும் கோடைகாலம், நேர்மறையான எண்ணங்கள் மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும் வண்ணமாக ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்கள் உள்ளன. இதன் காரணமாகவே உங்களுடைய மனம் இலேசாக உள்ளதைக் காட்டும் வகையில் கதகதப்பான பருவங்களில் இந்த வண்ணக் கலவைகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். நிறமாலையில் ஒரே மாதிரியாகத் தோற்றமளித்தாலும், இந்த வண்ணங்கள் மென்மையாகக் கலந்து கொண்டு, உங்களுடைய நகங்களுக்கு புத்துணர்வு மிக்க பளபளப்பைக் கொடுப்பதால், இந்த வண்ணக்கலவையுடைய நகங்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அது மட்டுமல்லாமல், கோடைக் காலங்களில் உங்களுடைய உடைகளுக்கு ஏற்ற வகையில் நகங்களை அலங்காரம் செய்வதும் நல்லதாகும்.

மெரூன் மற்றும் சாம்பல் நிறம் மெரூன் மற்றும் சாம்பல் நிறங்களைப் பயன்படுத்தி நகங்களை அழகுபடுத்தினால், அவை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். உங்களுடைய மோதிர விரல் தவிர பிற அனைத்து நகங்களுக்கும் சாம்பல் நிறத்தைப் தீட்டுங்கள் அல்லது இதற்கு மாறாக மெரூன் நிறத்தை தீட்டுங்கள். மீதமுள்ள நகத்திற்கு மற்ற வண்ணத்தை தீட்டுங்கள், அழகைப் பெற்றிடுங்கள்.

நீலப்பச்சை மற்றும் மஞ்சள் உங்களுடைய நகங்களை சில கோடுகள் அல்லது பூக்களைத் தீட்டி அழகுபடுத்தலாம். நகத்தின் அனைத்து இடங்களிலும் மஞ்சள் மற்றும் நீலப்பச்சை நிறத்தை தீட்டி விட வேண்டாம். சில மேக்கப் சாதனங்கள் மற்றும் நகைகளைக் கொண்டே எதிர்பார்க்கும் ஸ்டைலைப் பெற்று விட முடியும்.

ஊதா மற்றும் இளஞ்சிவப்பு ஊதா மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களை நகங்களில் தீட்டப் போகிறோம் என்று நீங்கள் முடிவெடுக்கும் போது, இது சற்றே குழந்தைத்தனமாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றும். எனவே, நிறமாலையில் உள்ளதைப் போலவே இந்த வண்ணங்களை நீங்கள் அளவாக பயன்படுத்த வேண்டும். நீங்கள் பிரெஞ்சு முறையில் அலங்காரம் செய்து கொள்ள விரும்பினால், ஊதா மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்கள் மிகவும் எளிமையாகவும் மற்றும் புத்துணர்வுடனும் உங்களைக் காட்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களை அதிகளவில் பாதிக்கும் அந்தரங்க பிரச்சனைகள்..!!
Next post ரஜினி அரசியலில் குதிக்க முடிவா?