நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் ஆட்டம் போட்ட மருத்துவர்கள்: அதிர்ச்சி வீடியோ..!!

Read Time:2 Minute, 5 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)கொலம்பியாவில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் மருத்துவர்கள் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலாம்பியாவின் போலிவார் பகுதியில் Santa Cruz de Bocagrande என்ற கிளினீக் உள்ளது. இங்கு சமீபத்தில் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நோயாளி மயக்க நிலையில் அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய செவிலியர்கள் மற்றும் உடன் இருந்த மருத்துவர்கள் சிரித்துக் கொண்டே ஆட்டம் போட்டுள்ளனர்.

இதை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதற்கு அந்த கிளினிக் சார்பில் கூறுகையில், இது போன்ற தவறான செயலில் ஈடுபட்ட ஐந்து பேரையும் நீக்கவிட்டதாகவும், ஒரு உயிரின் நிலைமை உணராமல் அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள். இது ஒரு தவறான செயல் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த கிளீனிக் துவங்கி ஏழு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் எந்த ஒரு தவறும் இதுவரை நடந்ததில்லை. இது போன்ற தவறுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியதால், பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்க வேண்டுமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு..!!
Next post கீர்த்தி சுரேஷை புகழ்ந்து தள்ளிய பா.ரஞ்சித்..!!