குள்ள மனிதன் கண்டுபிடிக்கப்பட்டானா? : இணையத்தைக் கலக்கும் காணொளி..!!

Read Time:1 Minute, 46 Second

1490676049_97316_hirunews_asf333r22rஇந்தோனேசியாவில் காட்டு வழியொன்றில் பயணம் செய்த நபர்கள் சிலர் கண்டதாக கூறப்படும் குள்ள மனிதரொருவரின் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சுமாத்திராவின் பந்தா ஆச்சே பகுதிக்கு சென்றிருந்த சிலரே இக்காட்சியை பதிவுசெய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் எதையோ ஒன்றைக் கண்டு கீழே விழுவதும், பின்னர் அவர்கள் ஒரு குள்ள மனிதரை துரத்துவதும் அதில் பதிவாகியுள்ளது.

எனினும் அந்த நபர் அடர்ந்த புல் வெளிக்குள் சென்று காணாமல் போவது அக்காணொளியில் பதிவாகியுள்ளது.

இக்காணொளி பல்வேறு விவாதங்களை இணையத்தில் தோற்றுவித்துள்ளது.மந்தே எனப்படும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாக இவர்கள் இருக்க க்கூடும் என ஒரு சிலர் விவாதித்து வருகின்றனர்.

அதேபோல் உடலளவில் சிறிய தோற்றம் கொண்ட வேறு சில பழங்குடியினரும் இருப்பதாகவும், அவர்களே இது எனவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் காணாமல் போனதாக கூறப்படும் ‘பிக்மி’ எனப்படும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த நபராக இருக்கமுடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதுகில் பருக்கள் வருவது ஏன் அதை எப்படி அகற்றுவது..!!
Next post தனுஷ் வழக்கில் மதுரை ஐகோர்ட்டு புதிய உத்தரவு..!!