தங்கை திருமணத்தினால் மனைவியின் காதை கடித்து துப்பிய கணவர்..!!

Read Time:1 Minute, 59 Second

625.0.560.320.160.600.053.800.668.160.90தமிழ்நாடு லால்குடி அருகே திருமணத்தின்போது மனைவி வீட்டில் கொடுத்த நகை, பணத்தை தங்கைக்கு செலவு செய்தது தொடர்பாக கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் மனைவியின் காதை கடித்து துப்பிய கணவரை பொலிஸார் கைது செய்தனர்.

லால்குடியை அடுத்த பச்சாம்பேட்டை முத்தியூர் பகுதியைச் சேர்ந்த பூமிபாலன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நவமணி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

திருமணத்தின்போது நவமணிக்கு, அவருடைய வீட்டில் கொடுத்த நகை மற்றும் பணத்தை பூமிபாலன் அவருடைய சகோதரியின் திருமணத்துக்கு செலவு செய்துவிட்டாராம். இதுதொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு கணவன்- மனைவி இடையே மீண்டும் வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது பூமிபாலன் நவமணியை தாக்கியதோடு, அவரது காதையும் கடித்து துப்பியுள்ளார்.

இது தொடர்பாக மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புகாரின் அடிப்படையில் லால்குடி பொலிஸார் வழக்கு பதிவு செய்து பூமிபாலனையும், அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவருடைய தாயார் செண்பகவள்ளியையும் (65) பொலிஸார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாதா சிலையிலிருந்து இரத்தம் வடியும் அபூர்வ நிகழ்வு..!! (வீடியோ)
Next post உட்கார்ந்தே இருந்தால் ஏற்படும் உபாதைகள்..!!