சாலையின் குறுக்கே ஓடிய நபருக்கு அபராதம்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! (வீடியோ)

Read Time:2 Minute, 17 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70சுவிட்சர்லாந்து நாட்டில் நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடிய குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 1,500 பிராங்குகள் அபாரதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சுவிஸில் உள்ள Neuchatel நகர் நெடுஞ்சாலையில் கடந்த அக்டோபர் மாதம் ஓட்டுனர் ஒருவர் காரில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, கார் ஓட்டுனருக்கு அறிமுகமான லொறி அவ்வழியாக வந்ததும் காரை நிறுத்திவிட்டு லாறி ஓட்டுனருடன் அவர் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில், திடீரென கார் தானாக சாலையில் ஓடத்தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுனர் அதை பிடிப்பதற்காக சாலையின் குறுக்கே ஓடியுள்ளார்.

தடுப்புச் சுவர் மீது மோதி பின்னர் மீண்டு கார் அங்குள்ள புல்வெளி மீது ஏறி நின்றுள்ளது.

இக்காட்சிகள் சாலையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக கார் ஓட்டுனர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் இறுதி வாதம் நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, ‘சாலையில் பொறுப்பற்ற முறையில் காரை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டு இருந்தது முதல் குற்றம்.

மேலும், கார் தானாக ஓடியபோது அது பிற கார்கள் மீது மோதி உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியிருக்கலாம்.

எனவே, இக்குற்றத்தை செய்த ஓட்டுனருக்கு 1,500 பிராங்க்(2,29,637 இலங்கை ரூபாய்) அபராதம் விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்த ஆசிரியர்கள்..!!
Next post ஏ.சி.யில் வளரும் உடலியல் சார்ந்த பல பிரச்சினைகள்..!!