பிரித்தானியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்: ஏன் லண்டன் வந்தார்! தேம்ஸ் ஆற்றில் குதித்த பெண் யார்?..!! (வீடியோ)

Read Time:2 Minute, 9 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிரித்தானியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது ரோமானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிருக்கு பயந்து அங்கிருந்த தேம்ஸ் ஆற்றில் குதித்து சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 பேர் பலி மற்றும் 40 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் அந்த மர்மநபர் பாராளுமன்ற வளாகத்திற்கு உள்ளே நுழைவதற்கு முன்னர், அருகே இருந்த பாலத்தில் விபத்தை ஏற்படுத்தினார்.

குறித்த விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். மர்மநபர் காரில் தொடர்ந்து அங்கிருந்த பயணிகள் மீது விபத்தை ஏற்படுத்தி வரும் போது, இளம் பெண் ஒருவர் பாலத்தின் கீழே உள்ள தேம்ஸ் ஆற்றில் குதித்தார்.

ஆற்றில் உயிருக்கு போராடிய அவரை பொலிசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது யார் அவர் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆற்றில் குதித்த பெண் ரோமானியாவைச் சேர்ந்தவர் என்றும் தன் வருங்கால கணவருடன், தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு லண்டன் வந்துள்ளார்.

அந்த பெண்ணின் பெயர் Andreea Cristea(29) என்றும் அவருடன் வந்த வருங்கால கணவரின் பெயர் Burnaz என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் Burnazக்கிற்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரச்சினை வந்தால் பதுங்கும் நீயெல்லாம் பாயும் புலியா?: விஷாலை வறுத்தெடுத்த தாணு..!!
Next post பெண்ணொருவரின் கருப்பையில் 10 குழந்தைகளுக்கு சமமான இராட்சத கட்டி..!! (படங்கள்)