ரூ.100 கோடி செலுத்தி விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் முதல் பெண்

Read Time:2 Minute, 10 Second

Russiya-First.jpgரூ.100 கோடி செலுத்தி விண்வெளிக்கு சுற்றுலா செல்ல ஒரு பெண் வந்து இருக்கிறார். இவர் அமெரிக்காவில் வசிக்கும் ஈரானியப்பெண் ஆவார்.விண்வெளியில் அமைக்கப்பட்டு உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு சுற்றுலாபயணிகளை அழைத்துச்செல்லும் திட்டத்தை ரஷியா செயல்படுத்தி வருகிறது. அமெரிக்காவைச்சேர்ந்த டென்னிஸ் டிட்டோ, மார்க் ஷட்டில்வொர்த், கிரெக் ஆல்சென் ஆகியோர் பணம் செலுத்தி விண்வெளிக்கு சுற்றுலா சென்று வந்தனர். இந்த வரிசையில் ஒரு பெண் விண்வெளிக்கு சுற்றுலா செல்ல இருக்கிறார். அவர் பெயர் அனுஷ்க் அன்சாரி.

இவர் ஈரான் நாட்டில் பிறந்தவர். அமெரிக்காவில் குடியேறி சொந்தமாக தொழில்செய்து வருகிறார். டெலிகாம் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை தன் கணவருடன் சேர்ந்து நடத்தி வருகிறார். இவர் விண்வெளி பயணத்துக்கு 100 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தி இருக்கிறார்.

விண்வெளி வீரர்களுடன்

இவர் வருகிற 14-ந்தேதி ரஷியாவின் சோயுஸ் டி.எம்.ஏ.9. என்ற விண்கலம் மூலம் விண்ணுக்கு அனுப்பப்படுகிறார். அந்த விண்கலத்தில் ரஷிய விண்வெளி வீரர்கள் மிகையில் டைïரின், ஸ்பெயினில் பிறந்த அமெரிக்க விண்வெளிவீரர் மிகயில் லோபஸ் அலெக்ரியா ஆகியோர் செல்கிறார்கள். அவர்களுடன் விண்வெளியில் 10 நாட்கள் இருப்பார். இவர் விண்வெளிக்கு பயணம் செய்யும் முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார்.

Russiya-First.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஐ.நாவின் காலக்கெடுவுக்கு இரான் மதிப்பளிக்கவில்லை
Next post இன்டர்நெட்டில் 10 ஆண்டுகளாக 10 லட்சம் சிறுமிகளின் செக்ஸ் படங்களை…