இந்த 10 விஷயத்த மனைவி உங்கக்கிட்ட இருந்துதா கத்துப்பாங்கன்னு தெரியுமா?..!!
இங்கு சிறந்த மனைவியாக திகழ கணவனிடம் இருந்து மனைவி கற்கும் 10 விஷயங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
கணவன் – மனைவி உறவு என்பது பாலத்தின் இரு முனைகள் ஆகும். ஏதேனும் ஒன்று உடைந்து போனாலும் பாலம் எனும் இல்வாழ்க்கை சீரிழந்து விடும்.
எனவே, இந்த பாலத்தை வலுவாக வைத்துக் கொள்ள வேண்டும், அதில் ஆரோக்கியமாக பயணிக்க வேண்டும் எனில் கணவன் – மனைவி இருவரும் ஒருவரிடம் இருந்து ஒருவர் நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அந்த வகையில் சிறந்த மனைவியாக திகழ கணவனிடம் இருந்து மனைவி கற்கும் 10 விஷயங்கள் பற்றி இங்கு காணலாம்…
தீர்வுகள்! ஏதேனும் பிரச்சனை என்றால் ஆண்கள் அழுவதை காட்டிலும், அதிலிருந்து எப்படி வெளிவருவது என்பதற்கான வழிகளையும், உத்திகளையும் தான் எண்ணுவார்கள். இதன் மூலம் உறவில் காதலும் அதிகரிக்கும். இது தான் தனது கணவனிடம் இருந்து ஒரு மனைவி கற்கும் முதல் விஷயம்.
செயற்பாடுகள்! “நான் சொல்றத தான் செய்வேன், செய்யிறத தான் சொல்வேன்..” என்ற ரஜினி வசனம் போல கணவன்மார்கள் அதிகம் பேசாவிட்டாலும், ஒரு விஷயத்தை பற்றி அதிகம் உள்வாங்கி அதை ஆராய்ந்து எதை செய்ய வேண்டும், செய்ய கூடாது என உணர்ந்து செயற்படுவார்கள். கேள்வி கேட்பது, தகவல் அறிவது போன்றவற்றை மனைவி கணவனிடம் இருந்து அதிகம் அறியும் விஷயமாகும்.
வகை பிரித்தல்! சிக்கல்களை கையாள்வது என்பது பெண்களை காட்டிலும், ஆண்கள் சிறந்து செயற்படும் இடமாகும். பெண்களால் இல்லறம் மற்றும் வேலை சார்ந்த இரு வாழ்க்கையை பிரித்து கையாள்வது சற்று சிரமம். ஏனெனில், இவர்களுக்கு நிறைய இடைஞ்சல்கள், இடையூறுகள் ஏற்படும். இதுபோன்ற வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை எப்படி கையாள்வது என கணவனிடம் இருந்து மனைவி கற்கிறார்.
நேரம் சிக்கனம்! ஆண்கள் தனது தோழர்களுடன் அதிக நேரம் வீணாக எந்த காரணமும் இன்றி பேசமாட்டார்கள். ஆனால், பெண்கள் அப்படி அல்ல, ஒருமுறை கால் செய்துவிட்டால் போதும் வேண்டியது, வேண்டாதது, சென்ற யுகத்தில் நடந்தது என அனைத்தையும் பேசித்தீர்க்காமல் விடமாட்டார்கள். நேரத்தை எப்படி பேசுவதில் இருந்து சிக்கனம் செய்வது என்பதை மனைவி கணவனிடம் இருந்து தான் கற்கிறார்.
மல்டி டாஸ்கிங்! பெண்களின் மல்டி டாஸ்கிங் மற்றும் ஆண்களின் மல்டி டாஸ்கிங் சற்றே வேறுப்பட்டு காணப்படும். வீட்டு மேலாண்மை, பிள்ளை வளர்ப்பு, வேலை, இல்லறம் என எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவது பெண்களின் மல்டி டாஸ்கிங். ஆனால், வேலை, விளையாட்டு, வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது என ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவது ஆண்களின் மல்டி டாஸ்கிங். இதன் மூலம் ஆண்கள் நேரத்தை மிச்சம் செய்து, அதிக வேலைகளில் ஈடுபடுவார்கள்.
நச்சரிப்பு! ஆண்கள் நச்சரிப்பது கொஞ்சுவதற்கும், கூடுவதற்கும் தான். ஆனால், பெண்கள் இந்த இரண்டை தவிர மற்ற எல்லா விஷயத்திற்கும் நச்ச்சரிப்பார்கள். நச்சரிக்காமல் இருப்பது எப்படி என்பதை மனைவி கணவனிடம் தான் கற்றுக் கொள்கிறார்.
உணர்ச்சி வெளிப்பாடு! பெண்கள் தங்கள் உணர்ச்சியை அடக்க தெரியாதவர்கள். ஆதலால், சீக்கிரம் அழுதுவிடுவார்கள், கோபப்பட்டு விடுவார்கள். இதனால், அவர்களுக்கு கெட்டப்பெயர் வரும். ஆனால், அதே சூழலில் ஆண்கள் தங்கள் உணர்சிகளை அப்படியே வெளிக்காட்ட மாட்டார்கள். உணர்ச்சியை கட்டுப்படுத்தி சூழலை கையாண்டு, அதிலிருந்து வெளிவர தான் யோசிப்பார்கள்.
குரலை வைத்தே அறிவது! அலைப்பேசியில் பேசினாலும் கூட மனைவியில் குரலை வைத்தே அவளது மனநிலை எப்படி இருக்கிறது, என்ன சிந்திக்கிறார் என அறியும் சுப்பர்பவர் கணவன்மார்களுக்கு உண்டு.
பேச்சு திறமை! எப்படி ஒரு சூழலை பேசியே மாற்றுவது என்பதை ஆண்களிடம் இருந்து தான் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டும். வீட்டில் ஏதேனும் சண்டை ஏற்பட்டால் பெண்கள் பெரிதாக்குவர்கள். ஆண்கள், பேசியே திசைதிருப்பி சண்டையை முடித்து வைத்துவிடுவார்கள். ஏனெனில், நியாயம் அம்மா பக்கம் இருந்தாலும், மனைவி பக்கம் இருந்தாலும் தலை உருளப் போவது என்னவோ ஆங்குளுடையது தானே.
பலே கில்லாடி! உணர்வு ரீதியாக பிணைப்பை அதிகரிக்க வேண்டும் என்றால், உணர்ச்சிப் பூர்வமாக எப்படி மனைவியை சாந்தப்படுத்தவது என்பதை நன்கு அறிந்தவர்கள் ஆண்கள். தாம்பத்தியம் மூலமாக உறவில் புத்துயிர் பெறவைத்து இல்லறத்தை நல்லறமாக ஆக்கும் திறன் ஆண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.
Average Rating