செல்ஃபி கேட்ட ரசிகருக்கு கவுண்டமணி கொடுத்த பஞ்ச்..!!
80-90 களில் தமிழ் சினிமாவில் காமெடியில் கொடிக்கட்டி பறந்தவர் கவுண்டமணி. இரண்டு தலைமுறை ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைத்திருக்கும் இவர், ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களுடன் நடிக்கும்போது அவர்களையே இவர் கலாய்த்து அனைவரையும் சிரிக்க வைத்திருப்பார்.
தனது அளப்பறியாத நகைச்சுவையின் மூலம் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த கவுண்டமணி, கவுண்டர் வசனங்களுக்கு பெயர் பெற்றவர். கோயமுத்தூரில் பிறந்த இவருக்கு, கோயமுத்தூர் குசும்பு ரொம்பவே அதிகம். மேலும் இவரது காமெடிகள் அனைத்து தலைமுறையினராலும் ரசித்து பார்க்கப்படும் ஒன்றாகவும் இருக்கிறது.
தனது வசனங்களால் மக்களை ரசிக்க வைத்த கவுண்டமணி, சிந்திக்கவும் வைத்திருக்கிறார். குறிப்பாக கவுண்டமணி – செந்தில் இருவரும் இணைந்து நடித்த காமெடிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்றால் அது மிகையாகாது. மக்கள் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள் மற்றும் இன்னல்களை தனது வசனங்களால் முன்கூட்டியே ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இவரையே சாரும். தொழில்நுட்ப வளர்ச்சியை பெரிதும் நாட்டமில்லாத நம்ம கவுண்டர் அதனை தவிர்த்தும் வருகிறார்.
அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர், கவுண்டமணியிடம் சென்று அவருடன் தனியாக ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்டுள்ளார். அதற்கு கவுண்டமணி தனக்கே உரித்தான ஸ்டைலில் பதில் கூறியுள்ளார். அது என்னவென்றால், அவருக்கு முன்னால் கையை நீட்டி, “அங்கே யாருமே இல்லை, போய் எடுத்துக்கோ” என்று கூறியுள்ளார். உடனே அந்த ரசிகரும் கவுண்டமணிக்கு எதிரே சற்று தூரம் சென்று கவுண்டர் பின்புறத்தில் உட்கார்ந்திருக்க, அவர் முன்பு நின்று ஒரு செல்ஃபி எடுத்து அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படம் சமூக வதைளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எத்தனை வருடங்கள் ஆனாலும் அவரது நக்கல் பேச்சும், பஞ்ச்-சும் அவரை விட்டு போகாது என்பது இதன்மூலம் ஊர்ஜிதமாகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating