காம உணர்வை தூண்டும் உணவுகள்..!!

Read Time:6 Minute, 11 Second

201703191844096953_inducing-foods_SECVPF-333x250காம உணர்வு என்பது வெறும் இச்சையாக இல்லமால் கணவன்-மனைவி இடையே இருக்கும் தாம்பத்யத்தை அதிகரிக்கும் உணர்வாகும். கீழ்க்கண்ட உணவுகளை சாப்பிட்டால் காம உணர்வு அதிகரிக்கும்.

ஒயின்:

ஒயின் குடித்தால் காம உணர்வு அதிகரிக்கும். ஒயின் சாப்பிடும் ஆண், பெண் இருபாலருக்கும் காம உணர்வு அதிகமாக தூண்டப்படுகிறது. இதில் ஒயின் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகளவில் அடங்கியுள்ளன. குறிப்பாக இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை செக்ஸ் ஹார்மோன்களை உடலில் அதிகமாகச் சுரக்கச் செய்கின்றன. ஆனால் ஒயின் உள்ளிட்ட மதுபான வகைகளை அதிகமாகக் குடிக்கக்கூடாது. அப்படி செய்தால் உடலுக்கு தீங்குதான். அது போல் அதிகம்குடிப்பதால் மயக்க நிலையே ஏற்படும்.

பூண்டு:

உணவில் பூண்டினை எந்த அளவிற்கு சேர்க்கிறோமோ அந்த அளவிற்கு உடல் நலமாக இருக்கும் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். பூண்டு சாப்பிட்டால் ஆண்களுக்கு விரைப்புடைவதில் பிரச்னை இருக்காது. காரணம் இரத்த ஓட்டத்திற்கு உதவும் அல்லிசின் என்ற பொருள் பூண்டில் உள்ளது. இதேபோல் ஆண்களின் விரைப்புத் தன்மையை அதிகரிக்கும் நைட்ரிக் ஆக்ஸைடு சிந்தேஸ் என்னும் பொருளை உற்பத்தி செய்வதில் பூண்டு பெரும் பங்கு வகிக்கிறது.

வாழைப்பழம்:

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பொட்டாசியம் அதிகமாக உளளது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி காம உணர்வை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடலில் அதிகம் சுரக்கச் செய்கிறது. இதேபோல் டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவை அதிகரிக்கச் செய்யும் புரோமிலெய்ன் (Bromelain) என்னும் பொருள் வாழைப்பழத்தில் நிறைந்துள்ளது. அதிக அளவு சர்க்கரை அடங்கியுள்ளதால், இது மிகுந்த சக்தியையும், நீண்ட நேரம் நீடிக்கும் இன்ப உணர்வையும் அளிக்கிறது.

அவகோடா:

ஆண், பெண் ஆகிய இருபாலாருக்குமே பாலுணர்வை உணர்வைத் தூண்டும் விஷயத்தில் பொதுவாகப் பயன்படும் பழம் அவகோடா. இப்பழத்தில் பீட்டா கரோட்டின், மக்னீ சியம், வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து ஆகியவை நிறைந்தது. இவை அனைத்தும் காம உணர்வைத் தூண்டுவதில் சிறப்பு வாய்ந்தவவை

அத்திப்பழம்:

அத்திப்பழம் பழங்காலத்தில் இருந்தே இனப்பெருக்க பிரச்னைகளை தீர்க்கவல்லது என்பதை அறிந்திருப்போம். அத்திப்பழத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி 1, வைட்டமின் பி2, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்துமே இனப்பெருக்க பிரச்னைகளை தீர்க்கும்.

சாக்லெட்:

பீனைல் எத்திலமைன் மற்றும் செரொடோனின் ஆகிய வேதிப்பொருள்கள் சாக்லெட்டில் உள்ளன. இவை நமது உணர்ச்சிப் பெருக்கினை அதிகரிக்கின்றன இதன் காரணமாக ஆற்றல் பெருகுவதுடன் , உறவின் போது, உச்சக்கட்டத்தை அடைவதற்கு உதவுகின்றன.

சின்ன வெங்காயம்:

தினமும் சாப்பாட்டில் சின்ன வெங்காயம் சேர்த்தால் கொழுப்பு கரையும். கால்சியம், இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளன. வெங்காயத்தை பச்சையாகவும் சாப்பிடலாம். இதில் உள்ள சத்துக்கள் காம உணர்வை அதிகரிக்கும் .

கொய்யாபழம்:

கொய்யா பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. இது விறைப்புத்தன்மை குறைபாட்டை நீக்க வல்லது. ஆண்கள் தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் அவர்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படாது.

தர்பூசணி:

தர்பூசணி ஒரு மினி வாயகரா என்று அழைக்கிறார்கள். ஆண்கள் சாப்பிட்டால் அதில் உள் அமினோ ஆசிட்டுகள் ஆண்களின் உறுப்பில் உள்ள இரத்த நாளங்களை ஒய்வடையச் செய்து, அவர்களுக்கு ஆண்மை இழப்பு ஏற்படாமல் தடுக்கும்.

மிளகாய்:

மிளகாயின் காரத்தன்மையினால் உடலினை சூடேற்றி, இது காமப்பெருக்கியாகக் கருதப்படுகிறது. குடைமிளகாயிலிருந்து, சிகப்பு மிளகாய் வரை அனைத்துமே காமப்பெருக்கிகள் தான். மிளகாயில் உள்ள கேப்சைசின் (Capsaicin) என்னும் வேதிப்பொருள் இரத்த ஓட்டத்தையும், இதயத்துடிப்பையும் அதிகரிக்கச் செய்கிறது. உ டல் வெப்பத்தை உயர்த்துகிறது. கேப்சைசினானது, உடலில் எண்டோர் ஃபின் (endorphins) என்னும் வேதிப்பொருளை சுரக்கச் செய்கிறது. மேலும் நரம்பு முனைகளை தூண்டி, இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து, உடலை மிகவும் உணர்ச்சி ததும்பும் அளவுக்கு மாற்றுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தரையிரங்கும் போது பயணிகளுடன் பற்றி எரிந்த விமானம்: காரணம் வெளியானது..!!
Next post கணவனை கொன்று சடலத்தை சூட்கேசில் மறைத்து வைத்த மனைவி : அதிர்ச்சி சம்பவம்..!!