சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள செர்ரி ஃபேஸ் பேக் போடுங்க..!!
இயற்கையான முறையில் தோலை பராமரிக்க பல்வேறு வழிமுறைகளை நித்தம் நித்தம் பயன்படுத்துபவர்கள் ஏராளம். அந்த வகையில் செர்ரி பழங்கள் தோலை வெளிர் நிறத்திற்கு கொண்டு வரவும் மற்றும் கருமையான இடங்களை சுத்தம் செய்யவும் உதவுகின்றன என்பதை நம்ப முடிகிறதா? இந்த பழங்களில் உள்ள எரிச்சலுக்கு எதிரான குணங்கள், அரிப்பு மற்றும் ரோசாசியா போன்றவற்றையும் கூட குணப்படுத்துகின்றன. மேலும், தோலுக்கு ஈரப்பதமூட்டி, தோலை மென்மையாக்கும் பணியையும் செர்ரிப் பழம் செய்கிறது.
பல்வேறு வகையான தோல் மற்றும் சுகாதார பலன்களை தரக் கூடிய இந்த சுவைமிக்க பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, தாமிரம், மாங்கனீசு மற்றும் பல தாதுக்கள் நிரம்பியுள்ளன. இவை மட்டுமல்லாமல் செர்ரிப் பழங்களை சாப்பிடுவதன் மூலம் தலைவலியை குணப்படுத்தவும் மற்றும் தூக்கமின்மையை சரி செய்யவும் முடியும். இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்கவும் மற்றும் ஆக்ஸிடேட்டிப் சேதாரமடையும் நியூரான்களால் ஏற்படும் நினைவாற்றல் இழப்பையும் தவிர்க்கவும் முடியும். •
அரைக்கப்பட்ட செர்ரி பழங்களின் கணுக்கலை நீக்கிவிட்டு அந்த கலவையை முகத்தில் தடவினால் உங்களுடைய முகத்தின் தோல் மென்மையாகவும், உறுதியாகவும் மாறும். ஒரு ஃபோர்க் உதவியுடன் செர்ரி பழங்களை அரைக்க முடியும். இந்த பழக்கலவையை முகத்தில் தடவும் முன்னர் முகத்தை கழுவுவதையும், சுத்தம் செய்வதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களுடைய தோலில் எண்ணெய் அதிகம் இருந்தால், காய்ந்த செர்ரிகளை பயன்படுத்துங்கள்.
• ஒரு தேக்கரண்டி சுத்தமான தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றுடன் சில செர்ரி பழங்களை சேர்த்து அரைத்து எளிமையான முறையில் ஃபேஸ் மாஸ்க்குகளை தயார் செய்து பயனடையுங்கள். இந்த கலவையை உங்கள் முகத்திலும், கழுத்திலும் தடவி விட்டு, 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள். இந்த வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஃபேஸ் மாஸ்க்கை கொண்டு அரிப்பு மற்றும ரோசாசியா போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் பெறுங்கள்.
• இரண்டு தேக்கரண்டிகள் சுத்தமான தேனையும், கையளவு செர்ரி பழங்களையும் கலந்து நமது தோலில் தடவி விட்டு, வெதுவதுப்பான தண்ணீரில் 20 நிமிடங்களுக்குப் பின்னர் கழுவினால் நமது தோலில் உள்ள சுருக்கங்கள், கோடுகள் ஆகியவற்றை இயற்கையாகவே நீக்க முடியும். இதன் மூலம் கருமையான இடங்களையும் சுத்தம் செய்ய முடியும்.
• 5 செர்ரி பழங்களையும், 3 ஸ்ட்ராபெர்ரி பழங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு பழங்களையும் நன்றாக மைய அரைத்து கிடைக்கும் கலவையை, உங்களுடைய முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவுங்கள். 5 நிமிடங்களில் உங்கள் தோல் பகுதி இளமையான உருவம் பெறும். இந்த கலவையுடன் ரோஸ் வாட்டரையும் கூட கலந்து மேலும் அழகு பெறவும் முயற்சி செய்யுங்கள்.
• கையளவு செர்ரி பழங்களை ஒரு ஃபோர்க்-ன் உதவியுடன் நன்றாக உடைத்து, அதனுடன் 2-3 தேக்கரண்டிகள் தயிரை கலக்கவும். இந்த கலவையை 20-30 நிமிடங்களுக்கு தோலில் வைத்திருந்து பின்னர் கழுவி நீக்குங்கள். இந்த கலவை சோர்வடைந்திருக்கும் தோலுக்கு புத்துணர்வூட்டும் வல்லமை படைத்ததாகும். மேலும், இந்த கலவையால் உங்களுடைய தோல் பளபளக்கும். இந்த கலவையுடன் நாட்டுச்சர்க்கரையை கலந்து செய்யப்படும் ஸ்கரப்பைக் கொண்டு தேவையற்ற் தோல் பகுதிகளை நீக்க முடியும்.
• இரண்டு தேக்கரண்டிகள் சர்ரி பழச்சாறுடன் ஒரு தேக்கரண்டி ஓட்மீல் சேர்த்து மற்றுமொரு இறந்த தோலை நீக்கும் செர்ரி ஃபேஸ் மாஸ்க்கை நீங்கள் தயார் செய்ய முடியும். இதனை உங்களுடைய தோலில் 5 நிமிடங்களுக்கு தடவி வைத்திருந்து விட்டு, அலசும் போது இறந்த தோல்கள் நீக்கப்படுகின்றன.
• எட்டு அல்லது ஒன்பது செர்ரி பழங்களை கூழாக்கி, நல்ல கனிந்த பீச் பழத்துடன் கலக்கவும். இந்த கலவையை ஒரு உணவு பதப்படுத்தும் கருவியில் அல்லது மிக்ஸியில் நன்றாக கலக்குங்கள். இறுதியாக கிடைக்கும் கலவையை உங்களுடைய முகத்தில் 20 நிமிடங்களுக்குத் தடவி விட்டு சுருக்கங்களைக் குறைக்கலாம். இந்த ஃபேஸ் மாஸ்க் வறண்ட தோல்களுக்கு மிகவும் ஏற்றதாகும். அதே நேரம் நீங்கள் இதனுடன் ஒரு தேக்கரண்டி சுத்தமான ஆலிவ் எண்ணெயை கலந்து மேலும் வளமுள்ள ஃபேஸ் மாஸ்க்காக பயன்படுத்தலாம்.
• முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் 2 தேக்கரண்டிகள் காhன்மீல், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் 10 செர்ரி பழங்களை நன்றாக கலந்து ஒரு கலவையை தயார் செய்யுங்கள். இந்த கலவை உங்களுடைய முகம் மற்றும் கழுத்துகளில் தடவுங்கள். இறுதியாக, 20 நிமிடங்கள் கழித்து வெந்நீரில் கழுவி சுத்தம் செய்யுங்கள்.
Average Rating