நட்புக்கு இலக்கணமாக பிரபல நடிகரின் பெயரை தனது மகனுக்கு வைத்த விஷ்ணு விஷால்..!!

Read Time:2 Minute, 19 Second

201703191156077120_Vishnu-vishal-son-named-Aryan-after-actor-arya_SECVPFநடிகர் விஷ்ணு விஷால்-ரஜினி நட்ராஜ் தம்பதியினருக்கு கடந்த ஜனவரி மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில், நேற்று தனது குழந்தைக்கு விஷ்ணு விஷால் ‘ஆர்யன்’ என்று தலைப்பு வைத்துள்ளார். இந்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்திலும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, என்னுடைய ராக் ஸ்டாருக்கு ஆர்யன் என்று பெயர் வைத்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நடிகர் ஆர்யாவின் பெயரை அங்கே குறிப்பிட்டு, உன்னுடைய பெயரை என்னுடைய குழந்தைக்கு வைக்கவேண்டும் என்ற உன்னுடைய ஆசையை நான் நிறைவேற்றிவிட்டேன். இது உனக்கு மகிழ்ச்சிதானே என்று கூறியுள்ளார்.

விஷ்ணுவின் இந்த டுவிட்டுக்கு ஆர்யா பதிலுக்கு நன்றி கூறிவிட்டு, இதுதான் உண்மையான நட்பு. அவன் வளர்ந்து என்னைப்போலவே சிறந்த ஜென்டில்மேனாக வருவான். இதை நான் காமெடிக்காக சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.

ஆர்யாவின் இந்த பதிலை விஷ்ணு விஷாலின் மனைவி கிண்டலடித்துள்ளார். தன்னைப்போலவே சிறந்த ஜென்டில்மேனாக வருவான் என்று ஆர்யா சொன்னதை கேட்ட ரஜினி, ‘நாசமாப் போச்சு. இருந்தாலும் உன்னைப்போல நல்ல உள்ளம் என்னுடைய மகனுக்கு கிடைத்தால், அதுவே எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் இன்னொன்று என்னவென்றால் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனுடைய பெயரும் ஆர்யன் என்பதுதான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எதுவரை நீளும் இந்த காலஅவகாசம்?..!! (கட்டுரை)
Next post பஸ்சில் பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்தவருக்கு பெண் கொடுத்த சரமாரியான அடி..!! (வீடியோ)