கண்ட கண்ட இடங்களில் ஆண்கள் தமது விந்தை வெளியேற்றினால் 100 டொலர் அபராதம்..!!

Read Time:3 Minute, 49 Second

Jessica-Farrar-addresses-the-Texas-Legislative-Sessionஆண்கள் பாலியல் சுய இன்பம் அனுபவித்தால் அவர்களுக்கு 100 டொலர் (சுமார் 15,000 ரூபா) அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என வைச் சேர்ந்த பெண் அரசியல்வாதி ஒருவர் வலியுறுத்துகிறார்.

டெக்ஸாஸ் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரான ஜெசிக்கா ஃபெரரே இவ்வாறு வலியுறுத்துகிறார். ஆண்கள் பாலியல் சுய இன்பம் அனுபவிப்பதானது, சுய இன்பம் அனுபவிப்பதானது பிறக்காத குழந்தைகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கை என அவர் கூறுகிறார்.

இதற்காக, டெக்ஸாஸ் மாநில சட்டமன்றத்தில் சட்டமூலம் ஒன்றையும் ஜெசிக்கா ஃபெரர் முன் வைத்துள்ளார். 50 வயதான ஜெசிக்கா ஃபெரர், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். ஹொஸ்டன் பல்கலைக்கழக பட்டதாரியான அவர், 1994 ஆம் ஆண்டு தனது 27 ஆவது வயதில் டெக்ஸாஸ் மாநில சட்டமன்ற அங்கத்தவராக முதல் தடவையாக தெரிவானார்.

அப்போதிருந்து டெக்ஸாஸ் சட்டமன்ற அங்கத்தவராக அவர் பதவி வகித்து வருகிறார். டெக்ஸாஸ் சட்டமன்றத்தின் நீதி மற்றும் சிவில் நீதி பரிபாலனக் குழுவின் உப தலைவியாகவும் பெண்களின் சுகாதார விவகாரக் குழுவின் உபதலைவியாகவும் ஜெசிக்கா ஃபெரர் விளங்குகிறார்.

டெக்ஸாஸில், பெண்கள் கருத்தடை சத்திரசிகிச்சை செய்து கொள்வதற்கு கட்டாயமாக குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும் போன்ற விதிகள் பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அவர் விமர்சிக்கிறார்.

பெண்களின் பாலியல், இனப்பெருக்க உரிமைகள் தொடர்பில் ஆண்கள் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு பதிலடியாக ஆண்கள் தொடர் பிலும் இதுபோன்ற சட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என ஜெசிக்கா ஃபெரர் விரும்புகிறார்.

இதற்காக சட்டமூலம் ஒன்றை அவர் கடந்த வாரம் டெக்ஸாஸ் சட்டமன்றத்தில் முன்வைத்தார். இச் சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டால் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் தவிர வேறு இடங்களில் வைத்து தமது உடலிலிருந்து விந்தை வெளியேற்றும் ஆண்களுக்கு 100 டொலர் (சுமார் 15,000 ரூபா) அபராதம் விதிக்கப்படும்.

கண்ட கண்ட இடங்களில் ஆண்கள் தமது விந்தை வெளியேற்றுவதானது, ‘பிறக்காத குழந்தைகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கை’ என்கிறார் ஜெசிக்கா ஃபெரர்.

இலக்கம் 4260 என குறிப்பிடப்பட்டுள்ள இச் சட்டமூலம் டெ க்ஸாஸ் சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படப்போவதில்லை என ஜெசிக்கா பெரர் அறிவார்.

ஆனால், இச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டதன்மூலம், பெண்களின் கர்ப்பங்கள் தொடர்பாக டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள விதிகளுடன் ஒப்பிடும்போது, தனது சட்டமூலம் அவ்வளவு கடுமையானதல்ல என்கிறார் ஜெசிக்கா ஃபெரர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இஸ்லாமிய பயணிகளுக்கு ஏற்பட்ட அவமானம்? புத்திசாலித்தனமாக அவர்களை காப்பாற்றிய பெண்..!! (வீடியோ)
Next post கணவன்-மனைவி உறவு குறித்து வள்ளுவர் கூறிய புணர்ச்சிமகிழ்தல்..!!