பாரிஸ் விமான நிலையத்தில் பரபரப்பு- பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றம்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 26 Second

625.147.560.350.160.300.053.800.264.160.90பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் விமான நிலையத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள புகழ்பெற்ற Orly விமான நிலையம் இன்று வழக்கம் போல பரபரப்புடன் காணப்பட்டது.

இந்நிலையில் அங்கு வந்த ஒரு மர்ம நபர் விமான நிலையத்தில் நின்றிருந்த பாதுகாப்பு அதிகாரியின் கையில் இருந்த துப்பாக்கியை அவரிடம் இருந்து பறிக்க பார்த்துள்ளார்.

உடனே உஷாரான அந்த அதிகாரி அந்த மர்ம நபரை தன் துப்பாக்கியால் சுட்டார்.

இதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். பின்னர் விமான நிலையத்தில் வெடிகுண்டு எதாவது இருக்கிறதா என பொலிஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

துப்பாக்கி சத்தம் பெரிய அளவில் கேட்டதால் விமான நிலையத்திலிருந்த பயணிகள் பெரும் பீதிக்கு ஆளானார்கள்.

தற்போது விமான நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நயன்தாரா நடிக்க மறுத்த படத்தில் அமலாபால்..!!
Next post மரத்தில் மோதி கார் தீப்பிடித்த விபத்தில் பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின்- மனைவி உடல் கருகி பலி..!!