இந்த பழக்கங்களை முறையாகப் பின்பற்றினால் ஆண்மைக் குறைபாடே வராதாம்..!!

Read Time:3 Minute, 9 Second

Capture-55-450x291பெண்களின் கருப்பையில் கரு தங்குவது என்பது அவர்களுடைய உடலில் உள்ள சில பிரச்னைகள் மட்டுமே காரணம் கிடையாது. பெண்களின் உடலைவிட ஆணுடைய விந்தணுக்களின் வீரியத்தைப் பொருத்தே கரு கருப்பையில் தங்கும் என்பதை மறந்துவிடுகிறோம்.

உண்மையிலேயே அதை நாம் மறந்து போனோமா என்றால் இல்லை. பெரும்பாலான ஆண்களுக்கு இன்றைய மாறுபட்ட வாழ்க்கைச் சூழலில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, வீரியமற்றதாக இருப்பது போன்ற பல பிரச்னைகள் இருக்கின்றன. அதற்கு பெரும்பாலும் அவர்களுடைய உணவுப்பழக்கமும் அன்றாட நடைமுறைகளும் தான் காரணம்.

இதை சரிசெய்ய என்ன தான் வழி? நம்முடைய சில பழக்க வழக்கங்களின் மூலமாகவே இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும். அதற்கு சில பயிற்சிகளும் கூட உண்டு.

ஆண்கள் தங்களுடைய உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருக்கிறோமா என்பதை முதலில் பரிசோதித்து அந்த அளவை சமன் செய்ய வேண்டும்.

விந்தணுக்கள் குறைவாக இருப்பதற்கும் வீரியமற்று இருப்பதற்கும் முக்கிய காரணம் ஆண்களுடைய உணவுப்பழக்கம். கொழுப்பு நிறைந்த உணவுகளின் அளவைத் தவிர்த்துப் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

லேப் டாப்பில் வேலை செய்யும்போது மடியில் வைத்து வேலை செய்வதைத் தவிர்த்தல் வேண்டும். அது விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்.

கேகல் பயிற்சி முறையை ஆண்கள் தினமும் செய்து வந்தாலும் இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமடையும்.

விந்து உற்பத்தியைத் தூண்டும் மற்றொரு அற்புத பயிற்சியும் உண்டு. ஆணுறுப்பை மிக மென்மையாகக் கைகளுக்குள் அடக்கிக்கொண்டு, மெதுவாக சுழற்ற வேண்டும். இடப்புறமாகவும் வலப்புறமாகவும் ஒரு நாளைக்கு 20 முறை சுழற்ற வேண்டும்.

குறிப்பாக, தூங்கச் செல்வதற்கும் உடலுறவுக்கு முன்பாகவோ சிறிது நேரம் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இதனால் ஆணுறுப்பின் சுற்றளவு அதிகரித்து, ரத்த நாளங்கள் விரிவடையும். அதோடு இந்த பயிற்சி மேற்கொள்வதால் விந்தணுக்களின் உற்பத்தியும் தூண்டப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் பட உலகில் ஆதிக்கம் செலுத்தும் கதாநாயகிகளை மையப்படுத்திய படங்கள்..!!
Next post குண்டாக இருப்பவர்கள் எந்த வகையான உடைகளை அணியலாம்..!!