இலங்கைக்கு சென்ற எண்ணெய் கப்பலை சோமாலியா கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்..!!

Read Time:2 Minute, 14 Second

201703141441149175_Somali-pirates-suspected-to-have-hijacked-ship-expert-says_SECVPFசோமாலியா நாட்டில் அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் பாதுகாப்பு குறைவாக உள்ள அந்நாட்டு கடல் பகுதி வழியாக செல்லும் கப்பல்களை சிறைபிடிக்கும் கடல் கொள்ளையர்கள், அதிலுள்ள நபர்களையும், பொருட்களையும் சிறைபிடித்து, பிறகு பெரிய அளவிலான பிணைத்தொகையை பெற்ற பின்னர் விடுவித்து வருகின்றனர்.

இதன் மூலம் கிடைக்கும் பணத்தை அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதற்காக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், வளைகுடா நாடுகளில் இருந்து இலங்கைக்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய்
ஏற்றிச் சென்ற சரக்கு கப்பலை சோமாலியா கடல் பகுதியில் கொள்ளையர்கள் சிறைபிடித்து, கடத்திச் சென்றதாக கடல் கொள்ளைக்கு எதிரான கண்காணிப்பு முகமை இன்று தெரிவித்துள்ளது.

கொள்ளையர்கள் அந்த கப்பலை சுற்றி வளைத்தபோது அதிலிருந்து எச்சரிக்கை ஒலி எழும்பியதாகவும், பின்னர் அது செல்லும் பாதையை கண்காணிக்கும் கருவியின் அணைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

துபாய் நாட்டை சேர்ந்த அந்த கப்பலை கொள்ளையர்கள் எந்த இடத்துக்கு கடத்திச் சென்றுள்ளனர் என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. வழக்கமாக சிறியரக கப்பல்களை மட்டும் கடத்தும் சோமாலியா கடல் கொள்ளையர்கள் கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு இதேபோன்றதொரு பெரிய சரக்கு கப்பலை கடத்திச் சென்று, பெரிய அளவிலான தொகையை பெற்றுகொண்டு விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிகினியில் ஹோலி: வைரலான பூனம் பாண்டேவின் வீடியோ..!!
Next post சப்தமில்லாமல் ஸ்ரீதேவி நடிக்கும் புதிய படம்..!!