தலையில் கத்தி ஊடுருவிய நிலையில் சுழியோடியின் உதவியை நாடிய சுறா..!! (வீடியோ)

Read Time:2 Minute, 31 Second

5-நிமிடத்தில்-முகத்திற்கு-பொலிவு-தரும்-வாழைப்பழம்சுறா ஒன்றின் தலையில் 12 அங்குல நீளமான கத்தியொன்று ஊடுருவிய நிலையில், அக் கத்தியை அகற்றுவதற்காக சுழியோடி ஒருவரின் உதவியை சுறா நாடிய சம்பவம் கரீபியன் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.

கரீபியன் பிராந்தியத்திலுள்ள கேமன் தீவுகளின் பவளப் பாறையொன்றுக்கு பென் ஜோன்சன் எனும் சுழியோட்டப் பயிற்றுநர், உல்லாசப் பயணிகளுக்கு சுழியோட்டப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார். அப்போது, சுமார் 3 அடி நீளமான சுறாவொன்று, பென் ஜோன்சனுக்கு அருகில் வந்ததாம்.

அந்த சுறாவுக்கு ஏதோ பிரச்சினை உள்ளது என்பதை உணர்ந்த பென் ஜோன்சன், மேலும் நெருங்கிச் சென்று பார்த்தார். அப்போது, அதன் தலையில் கத்தியொன்று ஊடுருவியுள்ளதை அவர் கண்டார்.

அக் கத்தியை அகற்றுவதற்காக உதவி கோரியே தன்னை அச் சுறா நாடி வந்துள்ளது என்பதை தான் உணர்ந்ததாக பென் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

பின்னர் அச் சுறாவின் தலையிலிருந்த கத்தியை இழுத்தெடுத்து அகற்றினாராம் பென் ஜோன்சன். “அச்சுறாவைப் பார்த்து உல்லாசப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். தலையில் கத்தி ஊடுருவிய நிலையில் சுறாவொன்றைப் பார்ப்பதற்காக இங்கு வருவதில்லை” என அவர் கூறியுள்ளார்.

மேற்படி சுறா தற்போது நலமாக உள்ளதாகவும், அச்சுறா மீண்டும் அப்பவளப் பாறைக்கு அருகில் நீந்துவது அவதானிக்கப்பட்டு ள்ளதாகவும் பென் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

கேமன் தீவுகளில் சுறா வேட்டையாடுவது 2015 ஆம் ஆண்டிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. சுறா வேட்டையாடுபவர்களுக்கு 5 இலட்சம் டொலர் அபராதம் அல்லது 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிக்குட்டிகளை பராமரித்து வரும் நாய்..!! (வீடியோ)
Next post தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் அமலாபாலின் தம்பி..!!