பாட்டியின் உயிரை காப்பாற்ற 8 கி.மீ நடந்து சென்ற 4 வயது சிறுமி..!!

Read Time:2 Minute, 23 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)ரஷ்யாவில் உயிருக்கு போராடிய தனது பாட்டியை காப்பாற்ற விலங்குகள் சுற்றி திரியும் காட்டில் 4 வயது சிறுமி தனியாக 8 கி.மீ நடந்து சென்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள Tuva என்ற ஒரு சிறிய கிராமத்தில் Saglana என்ற பெயருடனைய 4 வயது சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.

சிறுமியின் தாயார் தனியாக வசித்து வருவதாலும், தனது தாத்தாவிற்கு கண் தெரியாத காரணத்தினாலும் பாட்டிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிறுமி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சிறுமி படுக்கையை விட்டு எழுந்தபோது பாட்டி சுயநினைவின்றி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வீட்டிற்கு அருகில் யாரும் இல்லாத காரணத்தில் மருத்துவ உதவியை பெறுவதற்காக 8 கி.மீ நடைப்பயணம் மேற்கொள்ள தயாராகியுள்ளார்.

காட்டு வழியாக செல்லும் அந்த பாதையில் கரடிகளும் ஓநாய்களும் சுற்றி திரியும் என்பதை நன்கு அறிந்த பின்னரும் சிறுமி தைரியமாக நடந்துச் சென்றுள்ளார்.

சில மணி நேரப் பயணத்திற்கு பின்னர் நகரத்திற்கு சென்று மருத்துவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

ஆனால், துரதிஷ்டவசமாக மாரடைப்பு ஏற்பட்டிருந்த பாட்டி ஏற்கனவே உயிரிழந்துள்ளார்.

எனினும், கடும் குளிர் வாட்டும் அதிகாலை நேரத்தில், விலங்குகள் சுற்றி திரியும் காட்டு வழியாக தனியாக நடைப்பயணம் மேற்கொண்ட சிறுமியின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படவாய்ப்பு தருவதாக இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தயாரிப்பாளருக்கு தர்ம அடி..!!
Next post தயாரிப்பாளர், இயக்குனரை அனுசரித்து போகாததால் என்னை கொடுமைபடுத்தினார்கள்: விஷால் படநாயகி..!!