தலைவலி பலவிதம்…அலட்சியம் ஆபத்து தரும்..!!

Read Time:2 Minute, 34 Second

201703111014553808_Various-forms-of-headache-ignored-the-dangerous_SECVPFதலைவலியை அனுபவிக்காத மனிதர்களே இருக்க முடியாது. எப்போதாவது தலைவலி ஏற்பட்டுப் பின் மறைவது இயல்பு.

அதுவே, அடிக்கடியும், தொடர்ந்தும் ஏற்பட்டால், கவனமாக இருக்க வேண்டும். உடல்ரீதியான பிரச்சினை ஏதாவது ஒன்றை அந்தத் தலைவலி சுட்டிக்காட்டக்கூடும்.

குறிப்பாக, கண், தலையின் பின்புறப் பகுதி, தலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக வலி ஏற்பட்டால் அதை ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

காரணம் அந்த வலி, மூளையில் கட்டி, மூளைக் கசிவு மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற பாதிப்புகளின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

அதுமட்டுமின்றி, நாளடைவில் இந்த வலி, தீவிர தலைவலிக்கு வழிவகுக்கும் என்பதால் இதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டும்.

தினமும் அதிக நேரம் கண்களுக்கு வேலை கொடுப்பதால், கண்களில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கடுமையான தலைவலி பிரச்சினைகள் ஏற்படலாம்.

நாம் உட்காரும்போது, நமது கழுத்தின் பின்பகுதி மற்றும் முதுகுத்தண்டுப் பகுதியில் கடுமையான வலியை உணரக்கூடும்.

அதிகப்படியான தலைவலியும், இடுப்பு வலியும் சில நேரங்களில் வாந்தி, வயிற்று குமட்டல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

தலைவலி அதிகமாக இருப்பதால், சிலருக்கு கடுமையான காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

தலைவலியால் அன்றாடம் நமது செயல்கள், நடந்துகொள்ளும் விதங்களில்கூட அதிக மாற்றங்கள் ஏற்படும். அதிலும் சிலர் அதிகப்படியான கோபம், மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.

எனவே, தலைவலி தொடர்ந்து பாடாய்ப்படுத்தி வந்தால், உடனே மருத்துவரை அணுகி ஆலோசனையும், உரிய சிகிச்சையும் பெறுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயலலிதா நினைவிடத்தில் தியானத்தில் அமர்ந்த தீபா..!!
Next post ஒருவர் உச்சக்கட்ட இன்பத்தை அடைய இத்தனை வழிகள் உள்ளதா?..!!