வினோத நோயுள்ள சிறுவனுக்கு பிரபல உணவு நிறுவனம் செய்த நெகிழ்ச்சி உதவி..!!

Read Time:2 Minute, 9 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனின் நிலையை அறிந்து பிரபல உணவு நிறுவனம் அவனுக்கு உதவ முன்வந்துள்ளது.

பிரித்தானியாவின் Malvern நகரை சேர்ந்தவர் Stocker (47). இவர் மனைவி Mandy (44). இவர்களுக்கு William Stocker ( 8) என்னும் ஒரு மகன் உள்ளான்.

William க்கு ஆட்டிசம் நோயுடன் வேறு சில வினோத பழக்கங்களும் உள்ளன. அவனால் எல்லாரையும் போல எல்லா உணவுகளையும் சாப்பிட முடியாது. சிக்கனை சிறு துண்டுகளாக பிரை பண்ணி சாப்பிட அவன் விரும்புவான்.

சிவப்பு ஜெல்லி, சொக்லேட் ரோல்ஸ் போன்ற உணவுகளையும் எப்போதாவது William சாப்பிடுவான்.

அவன் அதிகம் சாப்பிடும் சிக்கன் துண்டு உணவுக்கு chicken nuggets என பெயராகும். இதை பிரபல நிறுவனமான Birds Eye பாக்கெட்டில் தயாரிக்கிறது.

சமீபகாலமாக Birds Eye நிறுவனம் chicken nuggetsன் நிறத்தையும், சுவையையும் மாற்றியுள்ளது.

அது Williamக்கு பிடிக்காததால் அதை சாப்பிடுதை நிறுத்தினான். இதனால் அவன் பெற்றோர் கவலையடைந்தனர்.

பின்னர், இது குறித்து Birds Eyeக்கு தகவல் தெரிவிக்கப்பட Williamகாக பழைய முறையில் chicken nuggets தயார் செய்து 40 கிலோவை அவன் வீட்டுக்கு அந்த நிறுவனம் அனுப்பி அசத்தியுள்ளது.

இது குறித்து William பெற்றோர் கூறுகையில், அவனால் இந்த உணவை தவிர வேறு உணவை உண்ண முடியாது.

இது குறித்து Birds Eyeயிடன் பேஸ்புக் மூலம் உதவி கோரினேன். அவர்களுடன் சேர்ந்து இன்னும் சிலரும் உதவினார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணமான மூன்றே ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற சர்ச்சை நடிகை..!!
Next post இப்படி ஒரு காட்சி பாத்திருக்கமாட்டீங்க பாருங்க..!! (வீடியோ)