முகப்பொலிவை அதிகரிக்கும் பழங்களின் தோல்கள்..!!

Read Time:2 Minute, 9 Second

201703111342346143_skin-care-peel-for-skin_SECVPFஆரஞ்சு பழத்தின் தோலில் வளமான அளவில் வைட்டமின் சி மற்றும் ஏ நிறைந்துள்ளது. இவை சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையானவை. அதில் வைட்டமின் சி சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். வைட்டமின் ஏ சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை மறைய வைக்கும். மேலும் முகப்பருவில் இருந்தும் விடுவிக்கும்.

வாழைப்பழத்தின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஏராளமாக நிறைந்துள்ளது. இது சரும செல்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் புறஊதாக் கதிர்களிடமிருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.

மாதுளையின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இது சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீங்கி, முதுமைத் தோற்றத்தைத் தடுத்து, சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும்.

எலுமிச்சையின் தோலில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை உள்ளதால், அது சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் வெளியேற்றும். மேலும் இதில் உள்ள சிட்ரிக் ஆசிட், சரும பொலிவை அதிகரிக்கும்.

ஆப்பிளின் தோலில் பாலிஃபீனால்கள் ஏராளமாக உள்ளதால், அது ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் சரும செல்களைப் புதுப்பிக்கும்.

பப்பாளியின் தோலில் ஆல்பா ஹைட்ராக்ஸி பொருள் உள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்க வல்லது. மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களையும் நீக்கவல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் சுண்டைக்காய்..!!
Next post இந்த மாதிரி பெண்கள் மீது ஆண்களின் கவனம் தானாகவே திரும்புமாம்..!!