`விஐபி-2′ அப்டேட்: படப்பிடிப்பில் இருந்து கிளம்பிய கஜோல்..!!
தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘வேலையில்லாப் பட்டதாரி’. இப்படத்தை இயக்குநர் வேல்ராஜ் இயக்கியிருந்தார்.
இந்நிலையில், சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இப்படத்தின் 2-வது பாகம் வேகமாக உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தனுஷ் கதை, வசனம் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.
இப்படத்திலும், தனுஷ் ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மேலும் கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், விவேக், ரிஷிகேஷ், மோனல் கஜ்ஜார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
`விஐபி 2′ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நடிகை கஜோல் தனது இன்ஸ்டோகிராம் பக்கத்தில் “விஐபி-2 படத்தில் தனது காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். தனது இறுதிகட்ட படப்பிடிப்பை இன்று முடித்து விட்டேன், படக்குழுவை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
42 வயதாகும் கஜோல், தமிழில் கடைசியாக 20 வருடங்களுக்கு முன் வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating