ஜெய்-அஞ்சலிக்கு நடுவில் புகுந்த ஜனனி ஐயர்..!!

Read Time:1 Minute, 35 Second

201703101631448106_Janani-Iyer-act-in-Jai--Anjalai-Starrer-Baloon-Movie_SECVPF5 வருடங்களுக்கு பிறகு ஜெய் – அஞ்சலி இணைந்து நடித்துவரும் புதிய படம் ‘பலூன்’. இப்படத்தை புதுமுக இயக்குநர் சினிஷ் என்பவர் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் பிற நடிகர், நடிகையர் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜனனி ஐயர் நடித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கதைப்படி, ஜனனி ஐயர், ஜெய்யை காதலிப்பதுபோல் படத்தில் வருவாராம். இவருடைய கதாபாத்திரத்திலிருந்து படத்தின் கதை நகரும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் ஜனனி ஐயர் செண்பகவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் வரும் காட்சிகள் அனைத்தும் பிளாஸ்பேக்கில் வருவதுபோன்று உருவாகியிருக்கிறதாம்.

ஜனனி ஐயர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையை அடுத்த கானாத்தூரில் அமைந்துள்ள மாயாஜால் திரையரங்கில் 2 நாட்கள் படமாக்கி முடித்துள்ளனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ஏப்ரல் முதல் வாரத்தில் கொடைக்கானலில் படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவில் உச்சத்தின் எல்லையை அடைய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்..!!
Next post கண்கள் சோர்வாக உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!!