சருமத்தில் சேரும் கறைகளை போக்கும் கடலை மாவு..!!

Read Time:1 Minute, 43 Second

201703090823525457_gram-flour-dirt-out-of-the-skin_SECVPFஅன்றாட காற்று மாசுக்களால் முகத்தில் படியும் கசடுகளை, கறைகளை அகற்ற கடலை மாவு சிறந்ததாக உள்ளது. கடலை மாவுடன் கொஞ்சம் வெள்ளரி சாறு கலந்து நன்கு குழைத்து பாதிப்பு உள்ள சரும பகுதிகளில் நன்கு பூசவும். பின் இருபது நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். சருமம் வழுவழுப்புடன் திகழும்.

அதுபோல் கடலை மாவுடன் பாதாம் பவுடர் மற்றும் எலுமிச்சை கலந்து குழைத்து முகம் முழுவதும் பூசி 30 நிமிடம் அப்படியே விடவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடவும். இதன் மூலம் முகம் பிரகாசமாக தோன்றுவதுடன் சரும ஆரோக்கியமும் மேம்படும்.

கடலை மாவுடன் சந்தனம், ரோஸ் வாட்டர், தேன் கலந்து முகப்பூச்சு செய்தால் முகத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் வெளியேறுவதுடன் சருமம் மென்மையும் வழுவழுப்பும் பெறும்.

துளசி இலைகளை நன்கு அரைத்து அதனை முகத்தில் பூசி, காய்ந்தவுடன் கழுவி விடவும். இதன் மூலம் முகப்பரு ஏற்படுவது தடுக்கப்படுவதுடன், முகச்சருமத்திற்கு போஷாக்கும் கிடைக்கின்றது. இயற்கையில் சாதாரணமாய் கிடைக்கும் பொருட்கள் மூலம் பெண்கள் தங்கள் அழகை மேம்படுத்தி கொள்ள முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் தலைவலி – புணர்ச்சிப் பரவசநிலையுடன் சம்பந்தப்பட்ட தலைவலி..!!
Next post உறவு கொண்டுள்ளாயா என சிறுமியிடம் கேட்ட காமகொடூரன்! தாய் எடுத்த அதிரடி முடிவு..!!