பாகிஸ்தானில் லொறிச் சாரதியாக பணியாற்றும் முதல் பெண்..!! (வீடியோ)

Read Time:3 Minute, 41 Second

sfsdfபாகிஸ்­தானில் 55 வய­தான பெண்­ணொ­ருவர் லொறிச் சார­தி­யாக பணி­யாற்­று­கிறார். ஷமீம் அக்தர் எனும் இப் பெண், பாகிஸ்­தானின் முத­லா­வது பெண் லொறிச் சார­தி­யாவார்.

சவூதி அரே­பி­யாவில் பெண்கள் காரோட்­டு­வ­தற்கு கூட அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை. எனினும், உலகில் பல நாடு­களில் விமா­னங்கள், பஸ்கள், ரயில்­க­ளையும் பெண்கள் செலுத்­து­கின்­றனர். ஆனால், லொறிச் சார­தி­யாக பெண்கள் பணி­யாற்­று­வது அபூர்வம்.

இந்­நி­லையில், பாகிஸ்­தானைச் சேர்ந்த ஷமீம் அக்தர் சில வருடங்களுக்கு முன் லொறி சார­தி­யாக பணி­யாற்ற ஆரம்­பித்தார். கண­வரின் துணை­யில்­லாத அவ­ருக்கு 5 பிள்­ளைகள். திரு­மண வயதில் 3 மகள்­களும் சிறு­வர்­க­ளான இரு மகன்­களும் இருந்­தனர்.

ராவல்­பிண்டி நகரைச் சேர்ந்த ஷமீம் அக்தர், தனது குடும்­பத்தை வாழ வைப்­ப­தற்­காக லொறி சார­தி­யாக பணி­யாற்­று­வ­தற்குத் தீர்­மா­னித்தார். அவர் ஏற்­கெ­னவே காரோட்­டு­வ­தற்கு கற்­றுக்­கொண்­டி­ருந்தார்.

இந்­நி­லையில், லொறி செலுத்­து­வ­தற்கு 8 மாத காலம் பயிற்சி பெற்ற பின்னர் அவர் கன­ரக வாக­னங்­களை செலுத்­து­வ­தற்­கான சாரதி அனு­மதிப்பத்­தி­ரத்தை பெற்­றுக்­கொண்டார்.

இதன்மூலம் பாகிஸ்­தானின் முத­லா­வது பெண் லொறி சாரதி எனும் பெரு­மையை அவர் பெற்றார். லொறியை செலுத்­து­வ­துடன் லொறியில் சிறிய பழு­து­பார்க்கும் வேலை­க­ளையும் அவர் செய்­து­கொள்­கிறார்.

இஸ்­லா­மாபாத் போக்­கு­வ­ரத்து பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து பெற்ற பயிற்­சியின் மூலம் கன­ரக வாக­னங்­களை செலுத்­து­வ­தற்கு தான் கற்­றுக்­கொண்­ட­தாக ஷமீம் அக்தர் தெரி­வித்­துள்ளார்.

லொறி, சார­தி­யாக அவ­ருக்கு கிடைத்த முதல் வேலை, ராவல்­பிண்­டி­யி­லி­ருந்து பாகிஸ்­தானின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள காஷ்மீர் பகு­திக்கு 7000 செங்­கற்­களை கொண்டு செல்­வ­தாகும்.

தற்­போது எந்த வகை­யான பொருட்கள் ஏற்­றப்­பட்ட லொறி­யையும் எவ்­வ­ளவு தூரம் வேண்­டு­மா­னாலும் தயக்­க­மின்றி செலுத்­து­கிறார் ஷமீம் அக்தர். அவரை தமது தாய் போன்று கருதுவதாக சக சாரதிகள் கூறுகின்றனர்.

பஸ் சாரதி அனுமதிப் பத்திரத்தையும் ஹமீம் அக்தர் பெற்றுள்ளார். தனது வேலையை தான் மிகவும் நேசிப்­ப­தாக அவர் கூறு­கிறார்.

”எதையேனும் செய்வதற்கு நீங்கள் உறுதிபூண்டால் எதுவும் கடினமாகாது” என ஷமீம் அக்தர் கூறுகிறார். தனது தொழில் ஏனைய பெண்களுக்கும் ஓர் உந்துசக்தியாக இருக்கும் என்கிறார் ஷமீம் அக்தர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகிலேயே முதன்முதலில் குழந்தை பெற்றெடுத்த ஆண் இவர்தானாம்… அதுவும் மூணு குழந்தையாம்..!!
Next post வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வது எப்படி..!!