கிரெஸ்ஸோவின் நோக்கியா 3310 சுமார் 3,46,000 ரூபாவிற்கு விற்பனை..!!

Read Time:2 Minute, 42 Second

sdfsdfsdகிரெஸ்ஸோ (Gresso) வடிவமைத்த நோக்கியா 3310 பீச்சர் போன் 2,290 டொலர்கள் (3,46,866 ரூபா) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 3310 சுப்ரிமோ புதின் பதிப்பு இந்திய மதிப்பில் 1,13,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆடம்பர செல்பேசிகளை வடிவமைக்கும் நிறுவனமான கிரெஸ்ஸோ, நோக்கியா 3310 ஐ வடிவமைத்து அதனை 3,46,866 ரூபாவிற்கு (இலங்கை மதிப்பு) விற்பனை செய்கிறது.

கிரெஸ்ஸோ 3310 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆடம்பர பீச்சர் போன் கிரேட் 5 டைட்டானியம் ஷெல் மற்றும் கீபேட் கொண்டுள்ளது. இத்துடன் 3 எம்பி பிரைமரி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 32 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் தாங்கும் படி உறுதியாகக் கட்டமைக்கப்பட்டுள்ள கிரெஸ்ஸோ நோக்கியா 3310 பீச்சர் போனில் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் டைட்டானியம் கிரே நிறங்களில் கிடைக்கும் இந்த பீச்சர் போன்கள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன.

புதிய வடிவமைப்பு கொண்ட நோக்கியா 3310 சில வாரங்களுக்கு முன் பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஒற்றை சிம் மற்றும் இரண்டு சிம் ஸ்லாட் கொண்டுள்ள இரு மாடல்கள் வெளியிடப்பட்டன. இரு மாடல்களிலும் 2.1 இஞ்ச் QVGA டிஸ்ப்ளே, 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன், 2G கனெக்டிவிட்டி, புதிய யூஸர் இன்டர்பேஸ், FM ரேடியோ, MP3 பிளேயர், 16 MP இன்டெர்னல் மெமரியும், மெமரியைக் கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

1200 Mah பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த போன் நான்கு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்தால் மாரடைப்பு அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!
Next post போலீஸ் காவலில் பாகிஸ்தானை சேர்ந்த திருநங்கையர் படுகொலை?..!!