ஹை கீல்ஸ் செருப்பு அணியும் பெண்கள் கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்..!!

Read Time:6 Minute, 5 Second

ஹை-கீல்ஸ்-செருப்பு-அணியும்-பெண்கள்-கவனிக்க-வேண்டிய-சில-டிப்ஸ்உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும் வாங்காதீர்கள்.

பகல் முழுவதும் நீங்கள் நடந்து வேலைமுடித்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட இரவு நேரம் பொருத்தமானது.

நீங்கள் அதிக உயரமாக தெரிய வேண்டும் என்று அளவுக்கு மீறிய 6 அங்குல உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை.
குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் ‘சோல்’ ரப்பரில் ஆனது தானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல் தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும்.

குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களின் லைனிங் செயற்கையான வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படாமல் இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலிற்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும்.

குதிகால் செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடியிராமல் அங்கங்கே காற்று புகும்படி திறந்த வெளியாக இருக்க வேண்டும்.

அதிகநேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். அழகைவிட பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும் அதுவே ஆரோக்கியமானது.

நடக்கும்போது கவனிக்க வேண்டியவை:
குதிகால் செருப்பணிந்தவர்கள் நடக்கும்போது குதிரை நடக்கும் குளம்பொலி சத்தம்போல் கேட்கும். பொருத்தமான குதிகால் செருப்பணிந்த பெண்கள் நடனம் கூட ஆடலாம். ஆனால் பழக்கமில்லாத சில பெண்கள் குதிகால் செருப்புடன் நடப்பதற்குச் சிரமப்படுவர். இத்தகைய பெண்கள் நடப்பதற்கு பயிற்சி எடுக்க வேண்டும்.
கைகளை முன்னும் பின்னும் நீட்டியசைத்து உடல் எடையைச் சமநிலை செய்து விட்டு நடந்து பழக வேண்டும்.
குதிகால் செருப்பணிந்தவர்கள் கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில் கால்களை எடுத்து வைக்க வேண்டும்.

மாடிப்படியேறும்போது முன்னங்காலும் குதிகாலும் படியில் ஒன்றுபோல் சமமாகப்பதித்து ஏறவேண்டும்.
மாடிப்படியில் இருந்து கீழிறங்கும்போது காலின் முற்பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும்.

குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்தல் நல்லது.

அதிகாலையில் குதிகால் செருப்பணிந்து நடக்கும்போது குதிகால் வீக்கம் ஏற்படும். இம்மாதிரியான வீக்கம் ஏற்படாமலிருக்க குதிகால் செருப்பணிந்து நடந்தவர்கள் 45 டிகிரி கோணத்தில் காலை நீட்டி கீழே உட்கார்ந்து 10 அல்லது 15 நிமிடநேரம் ஓய்வு எடுத்தல் அவசியம். இப்படி ஓய்வெடுக்கும்போது கால்களிலிருந்து ரத்த ஓட்டம் பிற இடங்களுக்குப் பரவி வீக்கம் குறையும்.

கால் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்துவிட்டால் குதிகால் வலியின்றிச் சுகமாக இருக்கும்.

கால்நீட்டி கீழே உட்கார்ந்து சிறிய பந்தின் மேற்பகுதியில் கால் பாதங்களை அழுத்தி உருட்டுதல், சிறிய கோலிகளை தரையில் போட்டு அவற்றை கால் பாதங்களின் முற்பகுதி விரல் இடுக்கில் அகப்படச் செய்து எடுத்தல் போன்றவை குதிகால் செருப்பு அணிபவர்களின் கால்களுக்கு நல்ல பயிற்சியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூங்கும் போது பக்கத்தில் எலுமிச்சை துண்டுகளை வையுங்கள்! நடக்கும் அதிசயம் இதோ..!!
Next post சுசித்ரா பெயரில் நடிகைகள் அந்தரங்கப் படங்களை வெளியிடுபவர் யார் தெரியுமா ? அதிர்ச்சி தகவல்..!! (வீடியோ)