பேன் – பொடுகை போக்க இயற்கை வழிமுறைகள்..!!

Read Time:3 Minute, 38 Second

201703061345219852_natural-treatment-for-hair-lices-dandruff_SECVPF (1)தலையில் ஏற்படும் வறட்சி, தலை குளித்துவிட்டு துவட்டாமல் போவது, தலையில் சோப்பு தண்ணீர், ஷாம்பூ தங்கிவிடுவது, அழுக்குத் தலை, அதிக எண்ணெய்ப் பசையுடன் இருத்தல், வியர்வை, நுண்ணுயிர்க் கிருமிகள், தோல் நோய்கள் போன்ற பல காரணங்களால் பொடுகு வருகிறது. மேலும், மனஅழுத்தம், கவலையாலும் இது வரலாம்.

பொடுகு பாக்டீரியாவால் ஏற்படுகிறது. முடியைச் சுற்றி பாக்டீரியா அரித்துவிடும். இதனால், தலையின் மேற்பரப்பு தோலில் இறந்துபோன உயிரணுக்கள் செதில் செதிலாகத் தோன்றி அரிப்பை ஏற்படுத்தும். இதுதான் பொடுகு. பொடுகு இருந்தால், பேன், ஈறு வந்து தலையில் வாசம் செய்யும்.

இதுதான் வழுக்கைக்கு முந்தைய நிலை. இதை ஆரம்பத்திலயே கண்டுபிடித்துவிட்டால், பொடுகுக்கான சிகிச்சையைத் தொடங்குவதன் மூலம் வழுக்கையில் இருந்து தப்பிக்கலாம்.

* எண்ணெய் தேய்த்து வாரும் வழக்கம் இல்லாமல் போனதன் விளைவு பேன்/பொடுகு தங்குவதற்கு இடம் கிடைத்துவிடுகிறது. தினமும் எண்ணெய் தடவி வாரி வந்தாலே, பேன் தலையில் நிற்காமல் வந்துவிடும்.

* ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். சொறி, சிரங்கு, கட்டி, பேன், பொடுகு அனைத்தும் நீங்கி தலை சூப்பர் சுத்தமாகிவிடும்.

* இந்த ஆலிவ் எண்ணெயுடன் பாதாம் எண்ணெய் கலந்து தேய்த்துவந்தால், பொடுகுத் தொல்லை ஒழியும்.

* நான்கு வேப்பங்கொட்டைகளின் தோலை அரைத்து விழுதாக்கி, தலையில் தேய்க்கவும். நல்லெண்ணெய் தேய்த்து தலையை வாரி, தலை முழுவதும் வேப்ப விழுதைத் தடவி பேக் போடவும். ஒரு மணி நேரம் கழித்து சீப்பால் வாரினால், பேன், ஈறு வெளியில் வந்துவிடும். பொடுகுத் தொல்லையும் மறையும்.

* ஒரு கப் நல்லெண்ணெயுடன் ஒரு ஸ்பூன் மிளகை உடைத்து காய்ச்சி, வடிகட்டவும். இந்த எண்ணெய்யைத் தலை முழுவதும் விடவும். ஒரு காட்டன் துணியால் ஒற்றி எடுக்கும்போது பேன், பொடுகு வந்துவிடும். பிறகு சின்ன சீப்பினால் வாரவும். வெந்தயப்பொடி, வேப்பம்பூ பொடி இவற்றைத் தலையில் தேய்த்துக் குளித்தால் பேன்/பொடுகு/ஈறு தொல்லை இருக்காது.

வாரம் ஒரு முறை மேலே கொடுத்துள்ள டிப்ஸ்களை மாற்றி மாற்றிச் செய்யும்போது, தலை சூப்பர் சுத்தமாக்கும்.

* வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல், நல்லெண்ணெய் தேய்த்து சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்..!!
Next post ஊருக்கே புத்தி சொல்லி நடிக்கும் ரஜினி மகள் குடிக்காரி பகிர் உண்மை..!! (வீடியோ)