காலை உணவாக வெறும் 3 முட்டை: நடக்கும் அதிசயம் இதோ..!!

Read Time:2 Minute, 24 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)தினமும் காலை உணவாக வெறும் மூன்று முட்டையை மட்டும் சாப்பிட்டு வந்தால், நமது உடலில் ஏற்படும் அற்புத நன்மைகள் இதோ

முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது.

முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை தினமும் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகளின் வலிமை அதிகரிக்கச் செய்கிறது.

முட்டை லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் ஆகிய கரோட்டினாய்டு பொருட்களை அதிகமாக கொண்டுள்ளதால், இது நமது கண்களின் கருவிழி செயலிழப்பு மற்றும் கண்புரை நோய்களை தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளைக் குறைத்து, மூளையின் செயல்பாட்டை சிறப்பாக இயக்குவதற்கு உதவுகிறது.
முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் ஆகியவை உள்ளது. எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.
குறிப்பு

எடையை குறைக்க டயட் இருப்பவர்கள் காலை உணவாக 3 முட்டை சாப்பிடுவதுடன் தவறாமல் உடற்பயிற்சி செய்து வந்தால், விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இணையதளத்தில் பரவும் அமெரிக்க கடற்படை பெண் அதிகாரிகள் நிர்வாண போட்டோக்கள்..!!
Next post சுசித்ரா டுவிட்டர் பக்கத்தை முடக்கிய பிறகும் வெளியாகும் அந்தரங்க படங்கள்: நடிகர்-நடிகைகள் கலக்கம்..!!