என்னுடைய அப்பாவுக்கு நடந்தது, இனி எந்த தயாரிப்பாளருக்கும் நடக்கக்கூடாது: விஷால் உருக்கம்..!!

Read Time:1 Minute, 54 Second

201703051752527851_Vishal-speech-about--producers-council-election_SECVPFநடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால் விரைவில் நடைபெறவிருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார். இதுகுறித்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது,

நடிகர் சங்க தேர்தலின்போது நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அடுத்த மாதம் நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்க இருக்கிறது. நடிகர் சங்கத்தில் இருக்கிற நான் தயாரிப்பாளர் சங்கத்திலும் போட்டியிட காரணம் என்னவென்று கேட்கிறார்கள்.

என்னுடைய அப்பா நிறைய படங்களை தயாரித்தார். நான் சிறுவனாக இருந்தபோது, தயாரிப்பாளர் சங்கத்திடம் தன்னுடைய படத்தை ரிலீஸ் பண்ணித் தருமாறு பிச்சை எடுத்தார். அதுதான் இன்று என்னை தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட வைத்ததற்கு ஒரு காரணம் என்றுகூட கூறலாம்.

என்னுடைய அப்பாவுக்கு நடந்தது இனிமேல் எந்த தயாரிப்பாளருக்கும் நடக்கக்கூடாது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க அயராது பணியாற்றுவேன். தயாரிப்பாளர்கள் ஒவ்வொருக்கும் சொந்தமாக நிலம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளையும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரும பொலிவுக்கு களிமண் பேஸ்பேக்..!!
Next post ஸ்மார்ட்போன்களில் வாழும் 3 விதமான புதிய நுண்ணுயிரிகள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்..!!