தீப்பற்றி எரிந்த வீடு: தாய் உள்பட 4 குழந்தைகள் உடல் கருகி பலி..!!

Read Time:2 Minute, 14 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (3)அமெரிக்க நாட்டில் வீடு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்த தாய் மற்றும் அவருடைய 4 குழந்தைகள் உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Massachusetts மாகாணத்தில் உள்ள Warwick நகரில் தான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நகரில் சுமார் 200 மக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12.45 மணியளவில் தீயணைப்பு துறைக்கு அவசர தகவல் ஒன்று வந்துள்ளது.

அதில், ‘நகரில் வீடு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக உதவிக்கு வருமாறு’ கோரிக்கை விடுக்கப்பட்டது.

தகவலை பெற்ற தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விபத்து நிகழ்ந்த இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், துரதிஷ்டவசமாக வீடு முற்றிலும் எரிந்து சாம்பலாக மாறியுள்ளது.

பொலிசார் விசாரணை நடத்தியபோது விபத்தில் தாய் மற்றும் அவரது 4 குழந்தைகளும் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் வீட்டில் வசித்து வந்த இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். எனினும், விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது இதுவரை தெரியவரவில்லை.

இவ்விபத்து குறித்து பொலிசார் பேசியபோது, ‘இப்பகுதியில் அவசர உதவிக்கு எவ்வித சாதனங்களும் இல்லை. தீவிபத்து நிகழ்ந்தாலும் கூட அதை கட்டுப்படுத்து போதுமான தண்ணீர் வசதி இல்லை’ என வேதனை தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தாய் உள்பட 4 குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மொட்ட சிவா கெட்ட சிவா புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!
Next post உணவு இல்லாமல் கடந்த 48 மணி நேரத்தில் 110 பேர் பலி: எந்த நாட்டில் தெரியுமா?..!!