சரும பொலிவுக்கு களிமண் பேஸ்பேக்..!!

Read Time:4 Minute, 9 Second

201702161012268453_Clay-therapy-for-the-skin-brightness_SECVPFசருமம் வெள்ளையாக, மிருதுவாக, மினுமினுப்புடன் இருக்க என விதவிதமான சோப், கிரீம், லோஷன்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், பக்க விளைவுகள் இல்லாத, ரசாயனக் கலப்புகள் இல்லாத சிறந்த தீர்வு இயற்கை மருத்துவத்தில் உள்ளது. அதுதான் களிமண் தெரப்பி. உடலுக்குக் களிமண் தெரப்பி செய்யும்போது, மண்ணுக்கு இருக்கின்ற பாசிட்டிவ் எனர்ஜி நம் உடலுக்கும் கிடைக்கும்.

மண்ணில் நிறைய வகைகள் உள்ளன. பெரும்பாலும் சிகிச்சைக்குப் பயன்படுத்துவது களிமண் மற்றும் சிவப்பு மண். சருமம் தொடர்பாக சிகிச்சை செய்யும்போது களிமண்ணால் சிகிச்சை செய்வது நல்லது.

களிமண்ணுடன் மஞ்சள், வேப்பிலை, கற்றாழைப் பொடி போன்ற மருத்துவப் பொக்கிஷங்கள் சேர்ந்த கலவையாகத் தயாரித்துப் பூசலாம்.

உடல் முழுவதும் பூச வேண்டும் எனில், பாதம், தொடை, மேல் உடல், முகம் எனப் பூச வேண்டும். முகத்துக்கு மட்டும் பூச வேண்டும் எனில் தாடை, கன்னங்கள், நெற்றி எனப் பூச வேண்டும்.

கண்களுக்குப் பூச வேண்டும் எனில், பருத்தித் துணியை ஈரப்படுத்தி, கண்களின் மேல் வைத்து, அதன் மேல் களிமண்ணைப் பூச வேண்டும்.

களிமண் பூசிய பின் 20-30 நிமிடங்கள் கழித்து நீரால் கழுவ வேண்டும். வாரத்தில் மூன்று முறை களிமண் சிகிச்சை செய்துகொள்ளலாம். வறண்ட சருமத்தினர் வாரம் ஒருமுறை செய்தாலே போதும்.

காலை 12 மணிக்கு முன் களிமண் சிகிச்சைசெய்வது நல்லது. ஆண்களுக்கு முகத்தில் பூசும்போது, தாடி இருப்பின் அந்த இடத்தில் உறிஞ்சும் தன்மை குறைவாக இருக்கும். அதனால், ஷேவிங் செய்த பின், களிமண்ணை முகத்தில் பூச வேண்டும்.

சளி, இருமல் பிரச்னை இருப்போர், சைனஸ், தொற்று, மாதவிலக்கான பெண்கள், பருக்கள் பரவி இருப்பவர்கள், புண்கள், காயங்கள் இருப்பவர்கள், மண் தெரப்பி எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குளிர் காலத்தில் களிமண் தெரப்பி செய்ய வேண்டாம்.

முகத்தில் பூசும்போது, இளஞ்சூடான நீரில் கலந்து பூச வேண்டும். அரை செ.மீ அளவுக்கு உடல் முழுவதும் களிமண்ணைப் பூச வேண்டும். கண்கள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் களிமண் பூசக் கூடாது.

காதினுள் மண் புக வாய்ப்பு இருப்பதால், காதில் பஞ்சை அடைத்துக்கொள்ள வேண்டும். பின், அதன் மேல் மண்ணைப் பூசலாம். சிலருக்குக் களிமண் தெரப்பி கூந்தலுக்கும் தேவைப்பட்டால் மட்டுமே பூசலாம். அனைவரும் கூந்தலில் பூசிக்கொள்ளக் கூடாது.

சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தும் சருமம் என்றால், முதலில் காது ஓரம் அல்லது கைகளில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் கழுவலாம்.

முதன்முறையாக சிகிச்சை செய்யும்போது, சித்த, ஆயுர்வேத அல்லது நேச்சுரோபதி மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செய்துகொள்ள வேண்டும். களி மண் பேக் சித்தா, ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீராத இருமல், சளியை விரட்டும் மிளகு, மஞ்சள் பால்..!!
Next post என்னுடைய அப்பாவுக்கு நடந்தது, இனி எந்த தயாரிப்பாளருக்கும் நடக்கக்கூடாது: விஷால் உருக்கம்..!!