ஆசிரியரை தாக்கிய 15 வயது சிறுவன்: 7 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 6 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70பிரான்ஸ் நாட்டில் யூத ஆசிரியர் ஒருவரை தாக்கிய சிறுவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிரான்ஸில் உள்ள Marseille நகரில் யூத மதத்தை சேர்ந்த Benjamin Amsellem என்பவர் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்தாண்டு ஜனவரி மாதம் சிறுவன் ஒருவன்(அப்போதையை வயது 15) பள்ளிக்குள் நுழைந்துள்ளான்.

பின்னர், வகுப்பில் இருந்த ஆசிரியை நோக்கி ஓடிய சிறுவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளான்.

இச்சம்பவத்தில் ஆசிரியரின் கழுத்தில் ஆழமாக காயம் ஏற்பட்டது. மேலும், பிற ஆசிரியர்களால் சிறுவன் சுற்றி வளைக்கப்பட்டுள்ளான்.

பொலிசாரிடம் ஒப்படைத்தபோது ‘ஐ.எஸ் தீவிரவாதி இயக்கத்தில் சேருவதற்காக இந்த தாக்குதலை நடத்தியதாக’ வாக்குமூலம் அளித்துள்ளான்.

சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை நேற்று முன் தினம் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, ஆசிரியரை கொல்ல முயன்ற குற்றத்திற்காக சிறுவனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், சிறுவனுக்கு தற்போது 17 வயது என்பதால் சிறார் பள்ளியில் தங்க வைத்து, 18 வயது பூர்த்தி ஆனவுடன் சிறைச்சாலையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபாச வீடியோவில் இருப்பது சஞ்சிதாஷெட்டிதானா?: சமூக வலைத்தளத்தில் புதிய சர்ச்சை..!!
Next post பிரித்தானியா சாலையில் பட்டப்பகலில் இடம்பெற்ற கொடூர சம்பவம்..!!