தொலைக்காட்சிகளைப் போன்றே நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது பேஸ்புக்..!!

Read Time:1 Minute, 52 Second

sasasபிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் விரைவில் தொலைக்காட்சிகளைப் போன்றே நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்னும் இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் முதலில் ‘பேஸ்புக் லைவ்’ என்னும் பெயரில் பயனாளர்கள் தங்களது வீடியோக்களை நேரலை ஒளிபரப்பு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது.

அதற்குக் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து தற்போது தொலைக்காட்சிகளில் வருவதைப்போன்றே நிகழ்ச்சிகளை வழங்க முடிவு செய்துள்ளது.

விளையாட்டு தொடங்கி அறிவியல் வரையிலான பல்வேறுபட்ட வகைகளில் நிகழ்வுகளை ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இவை அனைத்தும் வாரம் ஒரு முறை அரை மணி நேரம் ஒளிபரப்பாகும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளன.

இத்தகைய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குவோருக்கு கணிசமான அளவில் பணம் தரவும் பேஸ்புக் நிர்வாகம் தயாராகவுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னால் பயனாளர்களின் டைம்லைனில் போலிச் செய்திகள் அதிக அளவில் இடம்பெறுவதாக சர்ச்சைகள் எழுந்த காரணத்தால் இந்த புதிய நிகழ்ச்சிகளில் செய்திகள் இடம்பெறாது என தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமலாப் பாலின் ஆபாச படமும் இணையத்தில் வெளியானது..!! அதிர்ச்சி வீடியோ
Next post கொழுப்பை குறைக்கும்..முதுமையை தடுக்கும்- அற்புத பானம்..!!