பிரித்தானியாவில் நிரந்தர வதிவுரிமை! இலங்கையர்கள் தொடர்பில் அரசின் அதிரடி முடிவு..!!

Read Time:2 Minute, 49 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)அண்மைக் காலமாக பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியவர்கள் மற்றும் அகதிப் பிரஜையாக 5 வருடங்கள் வசித்து விட்டு நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பித்தவர்களுடைய விண்ணப்பங்களை உள்விவகார அமைச்சு பல மாதங்களாக முடிவுகள் எடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.

சாதாரணமாக உள்விவகார அமைச்சின் விதிமுறைகளுக்கு அமைவாக 6 மாதங்களுக்குள் அவர்களுடைய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

ஆனால் தற்பொழுது 6 மாதங்களுக்கு மேலாகவும் பல மாதங்களாக ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை தொடர்பாக கொள்கை மாற்றம் வந்தமையினால்தான் உள்விவகார அமைச்சு இவ்வாறாக விண்ணப்பங்களை நிலுவையில் வைத்துள்ளதாக பல தரப்பாலும் பேசப்பட்டு வந்துள்ளது.

இது தொடர்பாக உள்விவகார அமைச்சு,

“தற்பொழுது உள்விவகார அமைச்சின் இணயத்தளத்தில் உள்ள இலங்கைக்கான Guide தவிர கொள்கை மாற்றம் தொடர்பாக எங்களிடம் தகவல்கள் இல்லை” என உள்விவகார அமைச்சு Jay Visva Solicitorsக்கு தெரிவித்துள்ளது.

இருப்பினும், நாட்டுக்குரிய கொள்கை மற்றும் தகவல் குழு (Country Policy and Information Team) இலங்கைக்கு அண்மையில் ஒரு உண்மை கண்டறியும் பயணத்தை 2016 ஜூலை 09ற்கும் 23ஆம் திகதிக்குமிடையில் மேற்கொண்டதாகவும், அது தொடர்பான அறிக்கையை விரைவில் வெளியிட உள்ளதாகவும் உள்விவகார அமைச்சு Jay Visva Solicitorsக்கு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் உள்விவகார அமைச்சு முடிவுகள் எடுக்காமால் இருக்கின்ற விண்ணப்பங்களுக்கு விரைவில் முடிவுகள் எடுக்கலாம் அல்லது அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் கொள்கை மாற்றங்களைக் கொண்டுவந்து விண்ணப்பதாரர்களிடம் மேலதிக விபரங்களை கேட்டறிந்து Asylum Policy Instruction Revocation Of Refugee Status Version (4.0) அமைவாக முடிவுகள் எடுக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய நீங்கள் Jay Visva Solicitors தொடர்பு கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குறிப்பிட்ட காலத்திற்குப் பின் பெண்களுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைய காரணம்?..!!
Next post நாளைக்கு உன் பொண்டாட்டியா வாரானா இல்லையா பாரு – சூப்பர் வீடியோ இணைப்பு