தீராத இருமல், சளியை விரட்டும் மிளகு, மஞ்சள் பால்..!!

Read Time:1 Minute, 43 Second

irumbalதொடர்ந்து இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்குமான அருமருந்துதான் மிளகு, மஞ்சள் பால்.

மிளகு மஞ்சள் பால் செய்முறை :

கதகதப்பான ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்க்க வேண்டும்.

சளி, இருமல் இருப்பவர்கள், குறைந்தது, ஒரு வாரத்திற்கு இரவில் மிளகு, மஞ்சள் பாலை, அருந்தி வந்தால், நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

கிராமங்களில் இன்றளவும் கூட இந்த வைத்தியம் பின்பற்றப்படுகிறது. பாலில் மிளகையும், மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.

அதாவது, மஞ்சள் தூள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு அதிகமாக உள்ளது. மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி உடனடியாக உங்கள் உடலை விட்டு ஓடியே போய்விடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொரியாவில் புதிதாக மூலிகை கண்டுபிடிப்பு” – அதிகநேரம் உடலுறவில் ஈடுபட உதவுகிறதாம்..!!
Next post சரும பொலிவுக்கு களிமண் பேஸ்பேக்..!!