வாரம் ஒருமுறை சுண்டக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுமா..!!

Read Time:2 Minute, 30 Second

வாரம்-ஒருமுறை-சுண்டக்காய்-சாப்பிடுவதால்-இவ்வளவு-நன்மைகள்-ஏற்படுமாசுண்டைக்காய் நமது தமிழ் நாட்டில் இன்று கிராமப்புறங்களில் செய்வார்கள். அதனை குறிப்பாக வயிற்றிலுள்ள பூச்சிகளை ஒழிக்க உபயோகப்படுத்துவார்கள்.
சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை.

கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன.
ஜீரணத் தன்மை கொண்டது. சுண்டைக்காயை எடுத்துக் கொள்வதால் எந்த நோய்களை சரிபப்டுத்தும் என பார்க்கலாம்.

உடல் சோர்வு :
சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் உடற்சோர்வு நீங்கும்.

சுவாசப் பிரச்சனை :
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வயிற்றுப் புண் :
வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறிவிடும். அல்சர் மற்றும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

ரத்தத்தை சுத்தகரிக்க :
முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும் கபம் மற்றும் காச நோயாளிகளுக்கு :
தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸை தவிர, நடுவயதில் மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 8 விஷயங்கள்..!!
Next post மாதவிடாய் காரணத்தால் உடலுறவுக்கு மறுத்த புதுமனைவி கழுத்து எலும்பை உடைத்த கொடூரன்..!!