34 வயது கள்ளக்காதலனுக்கு பெண் பார்த்ததால் 60 வயதான கள்ளக்காதலி அதிர்ச்சி; இறுதியில் இருவரும் தற்கொலை..!!
60 வயது பெண்ணுக்கும், 34 வயது இளைஞருக்கும் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில் முடிந்ததில் இருவரும் இறுதி யில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் வேளச்சேரியை அடுத்த ஜல்லடியன்பேட்டை முன்னாள் படைவீரர் கொலனியை சேர்ந்தவர் விஜயகுமார்.
இவரது மனைவி லலிதா (60). தம்பதிக்கு சங்கர், ஆனந்த் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்களுக்கு திருமணமாகி வீட்டின் கீழ் தளத்தில் வசிக்கிறார்கள்.
லலிதா மேல்தளத்தில் வசித்தார். குடும்பத்தோடு சேர்ந்து உண்ணும்போது மட்டும் கீழ்தளத்துக்கு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் சங்கர், ஆனந்த் இருவரும் தி.நகரில் ஐஸ் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்துகிறார்கள். அதில் ராஜிவ்காந்தி (34) பகுதி நேர ஊழியராக பணிபுரிந்துள்ளார்.
மேலும் சங்கரும் ராஜிவ்காந்தியும் பாடசாலை யில் படிக்கும் காலத்தில் இருந்தே நண்பர்களாக இருந்துள்ளனர்.
இதனால் அவ்வப்போது அவர்களின் வீட்டிற்கும் ராஜிவ்காந்தி வந்து சென்றுள்ளார். கடந்த வாரம் லலிதா வசித்த தளத்திலுள்ள குளியலறைக்குள் சங்கர் குளிக்கச் சென்றுள்ளார்.
ஆனால், வாசல் கதவு பூட்டியிருந்துள்ளது. லலிதா உடல் அசதியால் உறங்குகிறார் என நினைத்த சங்கர் கீழே சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த சங்கரும் ஆனந்தும் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அப்போது சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வாசல் கதவை உடைத்துப் பார்த்ததில் உள்ளே போர்வையில் தூக்கிட்டு லலிதா தொங்கியுள்ளார்.
சமையலறையில் ராஜிவ்காந்தி லலிதாவின் புடவையில் தூக்கு போட்டு சடலமாக தொங்கியுள்ளார்.
இதனைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ‘‘வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றபோது ராஜிவ்காந்திக்கும் லலிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது.அவ்வப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
சங்கரின் பாடசாலை நண்பரான ராஜிவ்காந்தி சிறு வயதில் இருந்தே வீட்டிற்கு வந்து செல்வதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. லலிதாவும் ராஜிவ்காந்தியும் தாய், மகன் போல் பழகுகிறார்கள் என்றே எண்ணியுள்ளனர்.
இந்நிலையில்தான் ராஜிவ்காந்தியின் திருமணத்திற்கு அவரது பெற்றோர் பெண் பார்த்துள்ளனர்.
இதுதொடர்பாக லலிதாவுக்கும் ராஜிவ்காந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் வீட்டுக்குச் சென்ற ராஜிவ்காந்தியிடம் லலிதா கடும் வாக்குவாதம் செய்துள்ளார்.
அதன் முடிவில் இருவரும் சேர்ந்தே சாக முடிவு செய்துள்ளனர். அதன்படி தூக்கில் தொங்கியுள்ளனர்’’ என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Average Rating