கண்புரை வரக்காரணங்களும் – தீர்வும்..!!

Read Time:4 Minute, 6 Second

201702280826598573_cataract-solutions_SECVPFமனிதனுக்கு பார்வை மிகவும் முக்கியம், பார்வையின்மை பிறவியிலோ அல்லது வேறு பல காரணங்களாலோ நிகழலாம். பார்வையின்மை தவிர்க்கக்கூடிய காரணங்களால் (Preventable blindness) 80% ஆகும். கண் புரை முக்கியமான தவிர்க்கக் கூடிய பார்வையின்மைக்கான காரணம் பற்றி தலைமை மருத்துவர் லயனல் ராஜ் அவர்கள் கூறியதாவது:-

கண்புரை வெவ்வேறு காரணங்களால் வரக்கூடும். பிறப்பிலேயே வரும் புரையை (Congenital Cataract) என்போம். கர்ப்பக்காலத்தில் தாய்க்கு வரும் சில நோய்களாலும், சில நேரம் மரபு வழியாகவும் புரையுடன் குழந்தை பிறக்கக்கூடும். குடும்பத்திலே கல்யாணம் செய்வதால் மரபு வழி வரும் புரை குழந்தையை பாதிக்க வாய்ப்புகள் அதிகம். எந்த வயதிலும் அடிபடுவதன் காரணமாகவும் புரை வரக்கூடும்.

உடலை பாதிக்கும் மற்ற சில வியாதிகளும் கண்புரை இளம் வயதில் வரும் வாய்ப்பை அதிகரிக்கும். ஆனால் (senile) எனப்படும் புரைதான் மிகவும் சாதாரணமாக நாம் பார்க்கக்கூடியது. இது ஒரு வியாதி அல்ல, வயதினால் மற்ற உடல் உறுப்புக்களைப் போல் கண்ணில் வரும் பாதிப்புதான் இது.

கண்ணை ஒரு காமிராவுக்கு ஒப்பிடலாம். காமிராவில் உள்ளதுபோல் கண்ணிலும் ஒரு லென்ஸ் உள்ளது. இது ஒளிக்கதிர்களை பிலிம்க்கு இணையான ரெட்டினா எனப்படும் விழித்திரைமேல் விழச் செய்கிறது. விழித்திரையிலிருந்து நாம் பார்க்கும் பிம்பம் மூளையை அடைந்து நாம் பார்க்கும் காட்சியை உணரச் செய்கிறது.

வயதினாலும், கண்ணிலோ அல்லது உடலிலோ அல்லது காயத்தினாலோ லென்ஸ் டிரான்ஸ்பிரன்சியை இழக் கிறது. இதைத் தான் நாம் புரை என்கிறோம். கண்புரையை நிரந்தரமாக நீக்க ஐ.ஓ.எல். எனப்படும் ஆர்டிபீஷியல் லென்சை கண்ணில் பொருத்துவதன் மூலம் இழந்த பார்வையை மீண்டும் முழுமையாக திரும்ப பெற முடியும்.

நவீன முறையில் புரையை பேக்கோ எமல்சிபிகேஷன் (Phaco Emulsification) எனப்படும் முறையால் அகற்ற முடியும். இந்த முறையில் கத்தியின் உபபோகமின்றி புரையை (Micro incisision /Femtosecond Laser) மூலம் அகற்றி ஐ.ஓ.எல் (மிளிலி) லென்சைப் பொறுத்த முடிகிறது. தையல் அவசிய மில்லாத சிகிச்சை இது. பேக்கோனிட் (Phakonit) எனப்படும் முறையில் (Rollable IOL) பொருத்துவதன் மூலம் கண்ணில் 1 மி.மீ. (1 mm அளவே துவாரம் (entry) செய்து ஐ,ஓ.எல்.யை பொறுத்த இயலும். இது உலகின் மிக அதி உன்னதமான தொழில் நுட்பம்,

ஐ.ஓ.எல். என்னும் மிகவும் அதி நவீனமானவை பொருத்தப்படுகின்றன. மல்டிபோக்கல் எனப்படும் ஐ.ஓ.எல்.க்களை பொறுத்துவதன் மூலம் கண்ணாடியின்றி புரைக்கு முன்புபோல் முழுப்பார்வையையும் பெற முடிகிறது.

பெம்டோ லேசர் (Femto Laser) தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிநவீன முறையில் கண்புரை, கிட்ட, தூரப்பார்வை, கருவிழி மாற்று (பாதிக்கப்பட்ட அடுக்கு மட்டும்) மற்றும் கூம்புக் கருவிழி (Keratoconus) சரி செய்யப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15 வயதுச் சிறு­வனை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு அழைத்துச் சென்ற குடும்பப் பெண் கைது..!!
Next post செக்ஸுக்கு பிறகு இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க..!!