பொலிசாருடன் விசாரணைக்குச் சென்ற கைதியை சரமாரியாக வெட்டிய மர்மகும்பல்: அதிர்ச்சி வீடியோ..!!

Read Time:1 Minute, 53 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (5)தமிழகத்தில் விசாரணை கைதியை பொலிசார் அழைத்துச் சென்ற போது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் புல்லாவெளி பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரம். இவர் பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதால், அவர் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இவர் ஜெலட்டின் என்ற குச்சிகள் வைத்திருந்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக தூத்துக்குடியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்பதற்காக பொலிசார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜீப்பில் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது கே.டி.சி என்ற பகுதிக்கு ஜீப் சென்று கொண்டிருந்த போது கார்களில் வந்த மர்மகும்பல், அவர்களை தடுத்து ஜீப்பின் உள்ளே இருந்த சிங்காரத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில், இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உல்லாசத்துக்கு மறுத்த நண்பனின் தாயை கற்பழித்து கொலை செய்த கொடூரன்..!!
Next post 2.5 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் மணமகள் தப்பியோட்டம்: மணமகன் போலீசில் புகார்..!!