மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்: மத்திய மந்திரி..!!

Read Time:1 Minute, 56 Second

201702272008231557_union-minister-says-centre-not-to-implement-hydrocarbon_SECVPFதமிழகத்தின் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இதையடுத்து டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை சந்தித்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார். அப்போது, நெடுவாசல் திட்டம் மற்றும் அதற்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து பேசியுள்ளார். பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏதேனும் பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதா? என அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார். மக்கள் விரும்பாவிட்டால் திட்டத்தை செயல்படுத்த விரும்ப மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓமலூர் அருகே 2 பெண்டாட்டிக்காரர் அடித்துக்கொலை..!!
Next post மீத்தேன் எடுக்க மாற்று வழி கூறும் ஜி.வி.பிரகாஷ்..!!