பறவைகளைப் பார்த்தால் மன அழுத்தம் குறையும்: ஆய்வில் தகவல்..!!

Read Time:1 Minute, 20 Second

201702271324475964_Watching-birds-can-improve-your-mental-health_SECVPFஅதிகரித்து வரும் செல்போன் டவர்கள், மரங்களை அழிப்பது ஆகிய காரணங்களால் பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து உற்சாகம் பிறக்கும் என இங்கிலாந்தை சேர்ந்த எக்ஸீடர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுதவிர வசிக்கும் வீட்டைச் சுற்றி புதர்கள், மரங்கள் ஆகியவை இருப்பதும் மனிதர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கிறதாம்.

இதுகுறித்து எக்ஸீடர் பல்கலைக்கழக பேராசிரியர் டேனியல் காக்ஸ் “நகரத்தில் வசிப்பவர்களை விட இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களே அதிக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்” என கருத்துத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post களுத்துறை துப்பாக்கி சூடு சம்பவம் : காரணம் வெளியானது…!! (வீடியோ)
Next post ஓமலூர் அருகே 2 பெண்டாட்டிக்காரர் அடித்துக்கொலை..!!