ரஜினியின் பிரபல வசனத்தை படத்தலைப்பாக்கிய `சதுரங்கவேட்டை’ நாயகன்..!!
பிரபல பாடல்களின் பல பல்லவிகள் படத் தலைப்பாகியுள்ளன. பிரபல நாவல்களின் தலைப்புகளும் படத்தின் பெயராகியுள்ளன. அதே போல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசிய வசனங்களும் படத் தலைப்பாகி வருகின்றன. ‘இது எப்படி இருக்கு’, ‘என் வழி தனி வழி’, ‘கதம் கதம்’, ‘போடா ஆண்டவனே நம்ம பக்கம்’ தலைப்புகளைத் தொடர்ந்து ‘முள்ளும் மலரும்’ படத்தில் சூப்பர் ஸ்டார் பேசிய ‘கெட்ட பையன் சார் இந்தக் காளி’ என்ற வசனமும் ‘கெட்ட பையன் சார் இவன்’ என்று படத் தலைப்பாகியுள்ளது.
‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் நட்டிதான் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். இவர் இயக்குநர் ஏ.எல்.விஜய்-யிடம் ‘தாண்டவம்’, ‘தலைவா’, ‘சைவம்’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தீபக் கெட்ட பையன் சார் இவன் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
மேலும் இவர் ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘ராஜாதி ராஜா’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவரும் நடிகருமான ஆர். சுந்தர்ராஜனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.எச்..காஷிஃப் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 6 ஃபேஸ் ஸ்டுடியோஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating