ஆரணி அருகே இளம்பெண் வெட்டிக் கொலை..!!

Read Time:4 Minute, 41 Second

201702261347243711_Arani-near-young-girl-murder-case-police-inquiry_SECVPFதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இலுப்ப குணம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவருடைய மகன் ஜஸ்டின் கென்னடி (வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கும், வேலூர் மாவட்டம் ஆற்காடு காரை பகுதியை சேர்ந்த சுமதிக்கும் (26) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அனீஸ் என்ற 5 மாதக் கைக்குழந்தை உள்ளது. ஜஸ்டின் கென்னடி பல்வேறு வெளியூர்களுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அடிக்கடி ஊருக்கு வந்து மனைவி, குழந்தையை பார்த்துள்ளார்.இந்த நிலையில், மனைவி சுமதி நடத்தையில் ஜஸ்டின் கென்னடிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மனைவியிடம் தகராறு செய்தார். குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்றும் நினைத்தார். சந்தேகம் வலுவடைந்தது. இல்லற வாழ்க்கை கசந்தது. நேற்றிரவு ஜஸ்டின் கென்னடி குடிபோதையில் தள்ளாடியபடி வீட்டிற்கு வந்தார். வீட்டில் கென்னடி தந்தை அந்தோணி, அண்ணன் ஜான்சன் (38) ஆகியோர் இருந்தனர்.

ஜான்சன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் ஊருக்கு வந்திருந்தார். போதையில் இருந்த கென்னடி மனைவியிடம் மீண்டும் தகராறு செய்தார். கையில் கிடைத்ததை தூக்கி வீசி தாக்கினார். இன்று அதிகாலை 2 மணிவரை தகராறு நீடித்தது.

அதன்பிறகு, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற கென்னடி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி என்ற இரக்கமின்றி சரமாரியாக வெட்டினார். தாக்குதலில் கை, மார்பு, வயிறு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சுமதிக்கு வெட்டுக்காயம் பலமாக விழுந்தது.

ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, ராணுவ வீரர் ஜான்சன் ஓடி வந்தார். அண்ணன் என்று பார்க்காமல் அவரையும், கென்னடி சரமாரியாக வெட்டி சாய்த்தார். ஜான்சன் பலத்த வெட்டு காயமடைந்து உயிருக்கு போராடினார்.

தகராறில் கைக்குழந்தை அனீஷின் தொடையிலும் வெட்டு விழுந்தது. அக்கம், பக்கத்தின் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து அலறி எழுந்தனர். சம்பவம் நடந்த வீட்டிற்கு ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது, மனைவி கொன்ற ரத்தக்கறை படிந்துள்ள அரிவாளுடன் வெறிபிடித்தது போல் கென்னடி நின்றிருந்தார்.

மக்கள் அவரது அருகே செல்வதற்கு அஞ்சினர். இதுப்பற்றி களம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து, அரிவாளை கைப்பற்றி கென்னடியை கைது செய்தனர். இதையடுத்து, கொல்லப்பட்ட சுமதியின் உடலை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த ராணுவ வீரர் ஜான்சனுக்கும் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு, மேல் சிகிச்சைக்காக அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட கென்னடியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், நடத்தை மீதான சந்தேகத்தில் மனைவியை அவர் வெட்டி கொன்றது தெரியவந்தது. சுமதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் செய்யாறு உதவி கலெக்டர் பிரபு சங்கர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் காலமானார்..!! (வீடியோ)
Next post கண்டிஷன் போட்ட மாப்பிள்ளை: திருமணத்தை நிறுத்திய வைக்கம் விஜயலட்சுமி..!!