ஏன் தினமும் ஒரு முறைக்கு மேல் முகத்திற்கு சோப்பை பயன்படுத்தக் கூடாது தெரியுமா..!!
முகத்தை சுத்தம் செய்ய பலரும் பயன்படுத்தும் ஓர் பொதுவான பொருள் தான் சோப்பு. ஆனால் இந்த சோப்பை ஒருவர் அளவுக்கு அதிகமாக முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. இதற்கு சோப்பில் சேர்க்கப்பட்டுள்ள கெமிக்கல்கள் சரும செல்களை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கும். மேலும் அனைவருக்குமே அனைத்து சோப்புகளும் பொருந்தும் என்று கூற முடியாது.
எனவே ஒவ்வொருவரும் சரியான சோப்புகளை வாங்கி பயன்படுத்த வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி அவற்றை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்படியெனில் முகத்தை எப்படி சுத்தம் செய்வது என்று கேட்கலாம். முகத்தை சுத்தம் செய்ய சோப்பு மட்டும் தான் உதவும் என்றில்லை, சில இயற்கை பொருட்களும், ஏன் சரும வகைக்கேற்ப விற்கப்படும் மைல்டு ஃபேஸ் வாஷ்களையும் பயன்படுத்தலாம். இங்கு ஏன் தினமும் ஒரு முறைக்கு மேல் முகத்திற்கு சோப்பை பயன்படுத்தக் கூடாது என்பதற்கான சில காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சரும செல்கள் பாதிப்பு
சோப்புக்களில் உள்ள மோசமான கெமிக்கல்கள், சரும செல்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். சரும செல்கள் பாதிப்பிற்குள்ளானால், அதனால் முக அழகு பாதிப்பிற்குள்ளாகும். ஆகவே சோப்பை அதிகமாக முகத்திற்குப் பயன்படுத்தாதீர்கள்.
சரும வறட்சி
சோப்புக்களை அதிகமாக முகத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள நேச்சுரல் எண்ணெய் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் மிகுந்த வறட்சிக்குள்ளாகும்.
கொழுப்பு அமிலங்கள் நீங்கும்
சோப்புக்கள் சருமத்திற்கு பாதுகாப்பளிக்கும் கொழுப்பு அமிலங்களை முழுமையாக வெளியேற்றி, அதனால் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் தன்மையைக் குறைத்துவிடும். இதனால் அதிக சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
முகப்பரு
சோப்புக்கள் சருமத்தில் இருக்கும் கொழுப்பு அமிலங்களை வெளியேற்றி, பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளின் தாக்கத்தை அதிகரித்து, அதன் காரணமாக முகப்பரு அடிக்கடி வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
வைட்டமின்கள் வெளியேறும்
சோப்புக்களை அதிகமாக முகத்திற்கு பயன்படுத்தினால், அதனால் சருமத்தில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் வெளியேற்றப்பட்டு, அதனால் சரும பொலிவும், ஆரோக்கியமும் குறைந்துவிடும்.
pH அளவு பாதிக்கப்படும்
சோப்புக்களில் உள்ள கெமிக்கல்கள், சருமத்தின் ஈரப்பசையைக் குறைப்பதோடு, சருமத்தின் pH அளவை பாதித்து, அதனால் பல பிரச்சனைகள் வர வழிவகுக்கும்.
சருமத்துளைகள் அடைக்கப்படும்
நிறைய சோப்புக்களில் ஃபேட்டி அமிலங்கள் அதிகமாக உள்ளது. இவை சருமத்துளைகளில் தேங்கி அடைப்பை ஏற்படுத்தி, அதனால் முகப்பரு பிரச்சனையை மேன்மேலும் அதிகரிக்கும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating