ட்ரம்பின் மனைவி மீது குவியும் குற்றச்சாட்டுகள்! நாடு கடத்தப்படுவாரா…?

Read Time:2 Minute, 28 Second

unnamed (13)1996 ம் ஆண்டு சுற்றுலா விசாவில் அமெரிக்காவுக்கு வந்த தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மனைவியான மெலானியா அமெரிக்க சட்ட நிபந்தனைகளை மீறி நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அமெரிக்காவில் வசிப்பதற்கான சட்ட அனுமதி கிடைக்கும் முன்னதாகவே மெலானியா 20 ,000 டொலர்களுக்கு மேல் அங்கு சம்பாதித்திருப்பதாக அசோசியேட் செய்தி நிறுவனம் திரட்டிய ஆவணங்களின் மூலம் அறிய வந்துள்ளது.

2001ம் ஆண்டு அமெரிக்காவில் வசிப்பதற்கான கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்த போதும், அதனைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு அமெரிக்கப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்த போதும் அவர் தான் சட்டபூர்வமற்ற வகையில் உழைத்த பணத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கவில்லையென குடிவரவுக்கான சட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘எந்தவொரு வெளிநாட்டுப் பிரஜையாவது மோசடியில் ஈடுபட்டிருந்தால், அரசாங்கத்தையும் நீதியையும் பிழையான வழியில் நடத்தியிருந்தால், சிறிய குற்றங்கள் எவற்றையேனும் செய்திருந்தால் அவர்கள் அமெரிக்காவை விட்டு நாடு கடத்தப்படுவார்கள்.” என்பது தற்போதைய ட்ரம்பின் புதிய சட்டமாகும். எனவே, தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்தப் புதிய குடிவரவு சட்டத்தின் படி பார்த்தால் மெலானியா ட்ரம்பும் நாடு கடத்தப்பட வேண்டியவர் என்று சட்ட வல்லுநர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

மெலானியா ட்ரம்ப் சொல்வீனிய சோஷலிஸக் குடியரசு நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவரென்பதும் ஒரு மொடல் அழகியான அவர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முழுநேர சினிமா நடிகையாகும் டீ.டீ என்கிற திவ்­ய­தர்­ஷினி..!!
Next post படப்பிடிப்பில் கலந்து கொண்ட பாவனாவுக்கு ப்ரித்விராஜ் பாராட்டு..!!