முஸ்லிம் பெண்கள் இப்படி செய்வார்களா?? அரேபியர்களின் சர்ச்சைக்குள்ளானது நைக் நிறுவனத்தின் புதிய விளம்பரம்..!! (விடியோ)
பிரபல காலணி தயாரிப்பு நிறுவனமான ‘நைக்’ அண்மையில் வெளியிட்ட இணையதள விளம்பரம் ஒன்று, அரேபியர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விளம்பரத்தில் முஸ்லிம் பெண்கள் ஸ்கேட்டிங், குத்துச்சண்டை, வாற்சண்டை, ஐஸ் ஸ்கேட்டிங் நடனம், குதிரையேற்றம், உதைபந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
விளம்பரத்தின் முற்பகுதியில், சிறு தயக்கத்துடன் வெளிவரும் முஸ்லிம் பெண்ணொருவர் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுகிறார்.
மற்றொரு பெண் வீதியில் ஸ்கேட்டிங்கில் ஈடுபடுகிறார்.
வீதியில் செல்லும் பலரும் அவரை ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். ஆனால் மெல்ல மெல்ல அந்தத் தயக்கங்களை அவர் ஒதுக்கித் தள்ளுகிறார்.
பின்னணியில் ஒரு பெண் குரல், “அவர்கள் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? என்ன பேசுவார்கள்? ஒருவேளை, எல்லோருடைய எதிர்பார்ப்பையும் நீ தகர்த்துவிட்டதாகச் சொல்லக்கூடும்” என்று கூறுகிறது.
பின்னர், குத்துச் சண்டை, பெலே நடனம், ஐஸ் ஸ்கேட்டிங் நடனம், வாற்சண்டை போன்ற விளையாட்டுக்களில் முஸ்லிம் பெண்கள் கலந்துகொண்டு வெற்றியடைவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
விளம்பரத்தின் இறுதியில், ஒரு சிறு குழந்தை ஐஸ் ஸ்கேட்டிங் நடன அரங்கில் தயங்கியபடியே காலெடுத்து வைக்கிறது.
முடிவாக, நைக் நிறுவனத்தின் தாரக மந்திரமான Just Do It (இதைச் செயற்படுத்துவோம்) என்ற வாசகத்துடன் விளம்பரம் நிறைவுறுகிறது.
இந்த விளம்பரம் வெளியாகி இரண்டே நாட்களில் நான்கு இலட்சம் தடவைகள் பார்க்கப்பட்டுள்ள அதேவேளை, இது குறித்து ஆதரவும், எதிர்ப்புமான விமர்சனங்கள் பரவி வருகின்றன.
அரேபியாவில் உள்ள பெண்களை அசிங்கப்படுத்திவிட்டது நைக் என்று ஒரு சாராரும், அரேபியாவில் விளையாட்டின்பால் ஆர்வமுள்ள பெண்கள் சந்திக்கும் சவால்களை உடைத்தெறிய இந்த விளம்பரம் தூண்டுகிறது என்று ஒரு சாராரும் வாதிட்டு வருகின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating