மூளையில் நினைப்பதை டைப் செய்யும் கம்ப்யூட்டர்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!!

Read Time:2 Minute, 17 Second

201702231601552886_Brain-Computer-Interface-Allows-Speediest-Typing-to-Date_SECVPFதீவிர பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை- கால்கள் செயலிழந்து விடும். அதேபோல் வாய் பேசவும் முடியாது. எனவே, இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களால் தகவல் பரிமாற்றங்களை செய்ய முடியாது. அவர்கள் பேசுவது மற்றவர்களுக்கு புரியாது. மேலும் அவர்களால் கைகளால் எழுதி தரவும் முடியாது.

எனவே, அவர்கள் தகவல் பரிமாற்றங்களை செய்ய முடியாமல் தவிப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்ட் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். மூளையில் நினைப்பதை டைப் செய்யும் வகையில் கம்ப்யூட்டரை உருவாக்க அவர்கள் முயற்சித்தனர்.

இதற்காக மின்சார தாக்குதலால் கை- கால் செயலிழந்த மற்றும் வாய் பேச முடியாத ஒருவரை வைத்து ஆய்வு செய்தனர். அவருடைய மூளையில் நினைப்பதை கம்ப்யூட்டர் மூலமாக டைப் செய்ய முயற்சித்தனர்.

அதற்கு வெற்றி கிடைத்துள்ளது. அவர் என்ன சொல்ல வேண்டும் என்று மனதில் நினைக்கிறாரோ? அது மூளை வாயிலாக பரிமாற்றமாகிறது. அப்போது ஏற்படும் உணர்வை கம்ப்யூட்டர் கிரகித்து அதை டைப் செய்கிறது. இந்த கருவியை தலையின் மேல் பகுதியில் பொருத்திக்கொண்டால் போதும். அது, மூளையில் நடக்கும் அதிர்வுகளை துல்லியமாக கணித்து அவர் பேச வேண்டியதை டைப் செய்து தருகிறது.

இது பக்கவாத நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இன்னும் சில மாற்றங்களை செய்து இதை எளிமையாக உருவாக்க முயற்சி நடப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எவருடனும் பாலியல் உறவு கொள்ளலாம் என காதலிக்கு அனுமதியளித்த காதலன்..!!
Next post பந்தாடப்படும் கேப்பாப்புலவு..!! (கட்டுரை)