துபாயில் முதன் முறையாக 63 வயதில் குழந்தை பெற்ற பெண்..!!

Read Time:2 Minute, 12 Second

201702221156451055_63-year-old-Dubai-woman-gives-birth-to-baby-girl_SECVPFகணவன், மனைவியாக வாழும் தம்பதிக்கு அவர்கள் வாழ்வில் குழந்தை பாக்கியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெரும்பாலானவர்கள் குறிப்பிட்ட வயதிற்குள் தாயாகவும், தந்தையாகவும் ஆகிவிடுகின்றனர்.

ஆனால் ஒரு சிலருக்கு அப்பாக்கியம் அமைவதில்லை. அவர்களில் மிகவும் அரிதானோர் மிக வயதான காலத்தில் குழந்தை பாக்கியம் பெறுகின்றனர்.

அது போன்ற அதிசய நிகழ்வு சமீபத்தில் துபாயில் ஏற்பட்டது. இலங்கையை பூர்வீகமாக கொண்ட 63 வயது பெண் குழந்தை பெற்ற அரிய சம்பவம் நடந்தது.

இப்பெண்ணுக்கு ஏற்கனவே முதல் கணவர் மூலம் செயற்கை கருத்தரிப்பு முறையில் 13 வயதில் குழந்தை உள்ளது. தற்போது 2-வது திருமணம் செய்த அவர் சென்னையில் செயற்கை கருத்தரிப்பு முறை மேற்கொண்டார்.

தற்போது அவருக்கு துபாயில் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். குழந்தை 2.25 கிலோ எடை உள்ளது. இப்பெண்ணுக்கு டாக்டர் ஜாக்ரட் நிர்மலா பிரசவம் பார்த்தார். ஆனால் தம்பதியின் பெயர் வெளியிடப்படவில்லை.

கடந்த ஆண்டு அரியானாவை சேர்ந்த தவிஞ்சர் கவுர் என்ற பெண் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றார். அதே போன்று தற்போது இவரும் குழந்தை பெற்று இருக்கிறார்.

பொதுவாக் 60 வயதுக்கு மேல் பெண்கள் குழந்தை பெறுவது மிகவும் ஆபத்தானது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் 40 வயதுக்கு பிறகு அவர்கள் மிக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாவனா படுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்த டிரைவர்..!!
Next post கஜனின் தொடர் அழைப்பு; விக்கியின் நிராகரிப்பு; சுரேஷின் தயக்கம்..!! (கட்டுரை)